districts

img

மக்களின் மனங்களை வென்ற சமத்துவ கலை இரவு!

சென்னை,செப்.18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவொற்றியூர்-எண்ணுர் பகுதி சார்பில் சமத்துவ மக்கள் ஒற்றுமை கலை இரவு தந்தை பெரி யார் பிறந்தநாளான சனிக் கிழமையன்று (செப்17) எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர்கள் வி.கலாவதி-சு.விநாயகமூர்த்தி நினை வரங்கில் (பெரியார்நகரில்) நடைபெற்ற இந்நிகழ்வில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன்தீட்சண்யா சிறப்பு ரையாற்றுகையில்,  மனித வாழ்க்கையின் தொடக் காலத்தில் இயற்கை நீதி இருந்தது. இதில், ஆண் பெண், ஆண்டான் அடிமை பாகுபாடு இல்லாத, சமத்து வமான வாழ்க்கை முறை இருந்தது. பின்னர் இதனை சீர்குலைத்து ஏற்றத்தாழ்வை உருவாக்கும் மநுநீதி உரு வாக்கப்பட்டது. மானு டத்தை அழிக்கும் மநுநீதியிட மிருந்து மக்களை காப்பாற்றும் நீதி தான் சமூக நீதியாகும். 

சாதி அவக்கேடு
எல்லோருக்கும் எல்லா விதமான உரிமைகளும் வேண்டும் என்றுரைக்கும் சமூகநீதியை தமிழகத்தில் உருவாக்கியவர் தந்தை பெரியார். அவரை நாத்திய வாதி என்றோ, பகுத்தறி வாளர் என்றோ, பார்பன விரோதி என்றோ சுருக்கி பார்க்கும் நிலை இருக்கிறது. பெரியார் என்ற ஆளுமை தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூ னிஸ்ட் அறிக்கையை தமிழில் வெளியிட்டார். இங்கு பொதுவுடமை அவசியம் என்று மேடைகள் தோறும் முழங்கினார். சாதி அவக்கேட்டை விட்டொழிக்கவேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.

எல்லோருக்குமான பொதுநீதி
நாம் பேசிக்கொண்டி ருக்கும் ஒவ்வொரு 15 நிமிடமும் பெண்கள், தலித் மக்கள் எதிராக சாதி வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. சங்க ரன் கோவிலில் சாதிய வன்மத்தோடு சின்ன குழந்தைக்கு தின் பண்டம் கொடுக்க மறுக்கும் அவலங்கள் நடந்துவருகிறது. பொரு ளாதார அடிமைத்தனத்திலி ருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு சமத்துவம் என்கிற நிலையை அடைய சமூகநீதி தேவைப்படுகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், சொத்துடமை யில் பண்பாட்டு நடவடிக்கை யில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவம் கிடைக்க போராடுவோம். தமு எகசவோடு ஒத்தக் கருத்துள்ள பெரியாரிய வாதிகள், மார்க்சியவாதி களோடு இணைந்து களப்பணியாற்றுவோம் என பெரியார் பிறந்தநாளில் உறுதிஎடுப்போம் என்றார்.

கலைநிகழ்ச்சிகள்
இதையடுத்து வழக்க றிஞர் அருள்மொழி, திரைக் கலைஞர் ரோகிணி, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பனர் முனை வர் சுந்தவள்ளி ஆகியோரின் உரைவீச்சு நடைபெற்றது. முற்போக்குச்சிந்தனை யாளர் டிராஸ்கிமருது தலை மையில் ஊர்கூடி ஓவியம், பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் மக்கள் இசை, கரகம் ஒயிலாட்டம், காம் ரேட்டாக்கீஸ் ராப்இசை, பரதநாட்டியம், பாரம்பரிய சிலம்பாட்டம், மாணவர்கள் கவிதை உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. முனைவர் பகத்சிங், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பெரியாரின் ஆளுமைகள் குறித்தான பல தலைப்புகளில் நடை பெற்ற 620 கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. கலைஇரவில் தமுஎகச பகுதி தலைவர் உயிர் சண்முகானந்தம், செய லாளர் பா.ராஜேஷ், அலி பாஷா, பா.முனியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

;