districts

வேப்பேரி-புரசைவாக்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை,ஜூலை 27-  

     சென்னை வேப்பேரி, புரசைவாக்கத்தில் வியாழனன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி  ஒருவர் புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் காலை 9 மணி அளவில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வேப்பேரி ஜோதி ராமலிங்கம் தெருவில் ஒருவர் வீட்டிலும் பேக்கர்ஸ் ரோடு பகுதியில் ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.