திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதித் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், தலைவர் சி.முருகன், முன்னாள் செயலாளர் பி.சுந்தர், பகுதிச் செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர்.