ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்க கோரியும், மற்ற பொருட்கள் வாங்கினால் தான் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் நம்மாழ்வார் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் பா.தேவி, பகுதி நிர்வாகிகள் தனம், மாரியம்மா, கோகிலா, சரளா, வேல்விழி, பானுமதி, கனகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.