districts

img

விம்கோ சாலையோர கடைகள் இடிப்பு

திருவொற்றியூர்,டிச. 24- சாலையோர வியாபாரி களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி விம்கோ மார்க்கெட் சாலையோர வியாபாரிகள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதனன்று (டிச. 15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் விம்கோ மார்க்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோர் சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது விம்கோ ரயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை காரணம் காட்டி திருவொற்றியூர் வட்டாட்சியர் கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளார். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் வட்டாட்சியர், மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளி யன்று (டிச. 24) கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியு வடசென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.ஜெயராமன் கூறுகையில், இந்த வியா பாரத்தையே வாழ்வாதார மாக கொண்டிருக்கும் அவர்களின் வாழ்நிலை குறித்து கவலைப்படாமல் கடைகளை இடித்திருப்பது மனிதநேயமற்ற செயலா கும்.. இதை சிஐடியு சார்பில் வன்மையாக கண்டிக்கி றோம். சுரங்கப்பாதை அமைக்கக் கூடாது என்பது வியாபாரிகளின் கருத்தல்ல. விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை செல்ல சர்வீஸ் சாலை ஓரத்தில் இவர்கள் வியாபாரம் செய்து கொள்ள மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஏழை வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

;