சென்னை, ஆக. 7- மணப்பாக்கம் பகுதி யில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 9 குடியிருப்புகளை, நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 156வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையில், மசூதிக்கு பின் புறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையை ஆக்கிரமித்து 9 வீடுகள் கட்டப்பட்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரி கள், இந்த வீடுகளை அகற்ற முயன்றபோது, இதற்கு தடை கோரி, ஆக்கிரமிப் பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், குளத்தை ஆக்கிர மித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. பின்னர், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். அப்போது, அங்கு வசித்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதி காரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். அதற்கு, நீதிமன்ற உத்தரவால் இந்த பணி நடைபெறுவதாக தெரி வித்தனர். இங்குள்ள ஒரு வீட்டை இடிக்க முயன்ற போது, அந்த வீட்டின் உரிமை யாளர் வெளியே வர மறுத்து,போராட்டம் நடத்தி னார். அவரை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக மாக அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப் பட்டனர்.