districts

img

நீலாங்கரையில் தினசரி குடிநீர் வழங்குக!

சென்னை, மே 30 - சென்னை நீலாங்கரை பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி 192வது வட்டத் திற்குட்பட்டது நீலாங் கரை. இங்குள்ள அறிஞர்  அண்ணா நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப் போது குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படுகிறது. அண்மை யில் 12 நாட்கள் குடிநீர்  விநியோகம் நடைபெற வில்லை. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து குடிநீர் வாரிய உதவி செயற் பொறியாளர் பிரதிபாவிடம் வியாழனன்று (மே 30) மார்க்சிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிக்குழு உறுப்பினர் கோ.பூங்காவனம், கிளைச் செயலாளர் சு.வினோத் உள்ளிட்டோர் மனு அளித்த னர். இதில், 5 நாள், 8 நாள் என்றில்லாமல் அறிஞர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க வேண்டும். கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க, பழுதடைந்த பழைய குழாய்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை மாற்ற வேண்டும். பழுதடையும் மோட்டார்களை உடனுக்கு டன் பழுது பார்க்க வேண்டும் அல்லது புதிய  மோட்டார்களை பொருத்த வேண்டும். 192வது வட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து 193வது வட்டத்திற்கு குடிநீர் பகிர்ந்தளிக் கப்படுகிறது. இதனால் 192வது வட்டத்தில் உள்ள  மக்களுக்கு குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, 193வது வட்டத்திற்கு என்று தனி தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

;