districts

img

பாகூரில் வைத்திலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி, ஏப்.12- இந்தியா கூட்டணியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கமிட்டி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு, கொம்யூன்  கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கி னார்.  மாநில செயலாளர்  ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள்  பெருமாள்,  பிரபுராஜ்,தமிழ்ச்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர்கள்  கலியன் , சங்கர்,  இளவரசி உட்பட  கொம்யூன் குழு உறுப்பினர்கள் ஹரிதாஸ்,  கலைச்செல்வன், வடிவேலு, கௌசிகன், சேகர் மற்றும் நிர்வாகிகள் பத்வாசலம், முருகையன், வெங்கடாசலம், உள்ளிட்ட  திரளானோர்  பங்கேற்றறனர்.  முன்னதாக  பாகூர் கன்னியகோவில், மதி கிருஷ்ணாபுரம், மூர்த்திக்குப்பம், புது குப்பம், மனப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய கிராமங்களில்    வீதி வீதியாக சென்று கை சின்னத்தில் வாக்கு சேகரித்த னர். புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு வினரின் அரசியல் நையாண்டி,  பாடல்க ளோடு பிரச்சாரம் நடைபெற்றது.