districts

img

புதுச்சேரியில் சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி,செப்.6- ஒன்றிய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் வரலாறு காணாத விலைவாசி உயர்வை எதிர்த்து புதுச்சேரியில் நடை பெறும் ரயில் மறியல் போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடை பெற்றது. புதுச்சேரி நகரம் முதலியார்பேட்டை தபால் நிலையம் எதிரில்  மாநில செய லாளர் ஆர்.ராஜாங்கம், நகரச் செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் உரையாற்றினர். பாகூரில் நடந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கொம்யூன் செயலாளர் சரவணன்,மாநிலக்குழு உறுப்பினர் இளவரசி உள்ளிட்டோர் பேசினர். உழவர்கரை நகராட்சி லாஸ்பேட்டையில் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி, செயற்குழு உறுப்பினர் சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்து, சஞ்செய் உட்பட பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.