districts

img

சிபிஎம் கிளை செயலாளர் இளையராஜா காலமானார்

திருவள்ளூர், ஜூலை 20-

    திருவள்ளூர் மாவட்டம், சோழ வரம் அடுத்த கொடிப்பள்ளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் இளையராஜா (42),  புதனன்று (ஜூலை 19), இரவு  காலமானார். அவருக்கு வயது  மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி. சந்தானம், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன், மாவட்ட குழு உறுப்பினர் அ.பத்மா உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தி னர். கொடிப்பள்ளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வியாழனன்று (ஜூலை20) அடக்கம் செய்யப்பட்டது.