districts

img

வளைந்த முதுகெலும்பை சரிசெய்து எத்தியோப்பிய இளைஞரின் கால்பந்து கனவை நிறைவேற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஜூலை 6- ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவை சேர்ந்தவர் டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா. 15 வயதாகும் இந்த இளைஞருக்கு  கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த நாட்டம். ஆனால் பிற இளைஞர்களை போன்று அவரால் விளையாட முடியவில்லை. காரணம் அவரது முதுகெலும்பு மிக மோசமான அளவு  வளைந்திருந்ததே காரணம்.  சிறு வயதில் இருந்து வளையத்தொடங்கிய முதுகெலும்பு மிகமோசமான நிலையை எட்டியுடன் அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்ற  நிலையில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவ மனைக்கு வந்தார். அந்த இளைஞருக்கு மருத்துவமனையின்  முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிக்கலான முதுகுதண்டு அறுவை சிகிச்சை அளித்தனர். பொதுவாக  குழந்தைகளுக்கு இளம் வயதில் இத்தகைய  குறைபாட்டினை கண்டுபிடித்தால் எளிதாக குணப்படுத்த முடியும். இல்லாவிடில் முதுகெலும்பு மிக மோசமாக வளைந்து இதயத்தையும் நுரையீரல் செயல்பாட்டையும் பாதிக்கும் என்று டாக்டர் அப்பாஜி கிருஷ்ணன் கூறினார். முதுகெலும்பில் 30 டிகிரி முதல் 50 டிகிரி வரை ஏற்படும் வளைவை மருந்து மற்றும் பயிற்சிகள் மூலமாகவே சரிசெய்து  விடமுடியும். 50 டிகிரிக்கு மேல் வளைந்துவிட்ட முதுகெலும்பை  அறுவை சிகிச்சையால் மட்டுமே நேர் செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.