சென்னை, மே 6 - மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கி, வளர்த்தெடுத்த ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஒரு சரித்திரம் உள்ளது என்று கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். மயிலாப்பூர் பகுதி, 173வது வட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கி, மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்தார் தோழர் வி.சேகர். கொரோ னாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - பெயர்ப் பலகை திறப்பு நிகழ்வு வியாழனன்று (மே 5) ராஜா அண்ணாமலைபுரத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பெயர் பலகையை திறந்து வைத்து பேசிய என்.குணசேகரன், “பல்வேறு தாக்குதல், சவால்களை முறியடித்து வாலிபர் சங்கத்தை சேகர் போன்றவர்கள் கட்டியமைத்தனர். எதிர் நீச்சல் அடித்து இயக்கத்தை பேணிக்காத்து வளர்த்தனர். தங்களது பகுதிகளில் கிளை களை உருவாக்கி வளர்த்த ஒவ்வொருக்கும் ஒரு சரித்திரம் உள்ளது” என்றார். “கொரோனா உயிரிழப்புகள் முதலா ளித்துவத்தின் தோல்வியை காட்டுகிறது. இதன் வெளிப்பாடுதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேகர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார். சுகாதாரம் அனைவருக்கும் அடிப்படை உரிமையாக்க வேண்டும். அதை மக்களின் முழக்கமாக மாற்ற உறுதியேற்போம். இதற்காக உழைக் கும் மக்களை திரட்டுவோம்” என்றார்.
கே.சாமுவேல்ராஜ்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் பேசுகையில் , “கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மக்கள் அலுவலகங்களாக செயல்படுகின்றன. பல அலுவலகங்கள் பூட்டப்படுவதே இல்லை. கம்யூனிஸ்டு களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை மகத்துவ மானது. மக்கள் பிரச்சனைக்காக அனுதின மும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் போரா டிக் கொண்டு இருக்கிறோம். கம்யூனிஸ்ட்டு கள் வளர்ந்தால் மக்கள் வளர்வார்கள்; தேசம் வளர்ச்சியடையும்” என்றார். “மக்களின் அடிப்படை பிரச்சனைக ளுக்காக போராடிய தோழர் சேகரின் நினைவுகள், 50 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனங்களில், கட்சியின் மேடைகளில் கலந்திருக்கும்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளைச் செயலாளர் வி.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலை பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, திமுக மயிலை கிழக்கு பகுதிச் செயலாளர் எஸ்.முரளி, பத்திரிகையாளர் மயிலைபாலு, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முரளி, எம்.சரஸ்வதி, திமுக வட்டச் செயலாளர் துரைபார்த்திபன், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் எஸ்.மகேஷ், கிளைச் செயலாளர் என்.ஜோதிபாசு உள்ளிட்டோர் பேசினர்.