districts

img

தோழர் பி.சீனிவாசன் படத்திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை செயலாளரும் மின் ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடியவருமான மறைந்த தோழர் பி.சீனிவாசன் படத்திறப்பு நிகழ்ச்சி எஸ்.சுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. உருவப்படத்தை மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், எஸ்.எம்.அனீப், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், சிஐடியு நிர்வாகிகள்  என்.ரமேஷ்குமார், பாண்டியன், வெங்கடேசன், நரேஷ்குமார் தோழர் சீனிவாசன் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.