districts

img

தோழர் ஆறுமுத்து காலமானார்

திருத்தணி,ஜன.2- திருத்தணி வட்டம் புச்சிரெட்டிப்பள்ளி கட்சி கிளை உறுப்பினர் தோழர் ஆறு முத்து  உடல் நல குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 81. கைத்தறி நெசவாளர் மகாத்மா காந்தி கூட்டுறவு சங்கத் தலைவராக திறம்பட பணியாற்றியவர். கடைசி மூச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்காக களப்பணியாற்றியவர். அவரை பிரிந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தணி வட்டக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.