districts

img

தோழர் அமீர் ஹைதர்கான் நினைவு நாள்...

சென்னை மாநகரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க அடித்தளமிட்ட தோழர் அமீர் ஹைதர்கான் நினைவு நாளான செவ்வாயன்று ( டிச.27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் பார்த்தசாரதி புரத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிக்குழு உறுப்பினர் சுரேந்திரன், கிளைச் செயலாளர்கள் தி.பாலசங்கர், எஸ்.சரளா, ஜி.மகாதேவன் உள்ளிட்டோர் பேசினர்.