districts

img

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு, மே 30- செங்கல்பட்டு வட்டாட்சி யர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிடப்பில் கிடக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். செங்கல்பட்டு வட்டாட்சி யர் அலுவலகத்தில் வருகை பதிவேடு பட்டா  மாறுதல், பட்டா நிராகரிப்பு, சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், இணைய வழி சான்றிதழ் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் திடீர் ஆய்வு மேற் கொண்டார். வருவாய்த்துறையில் பட்டா மாறுதலுக்கு விண் ணப்பங்களை பொதுமக்க ளுக்கு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களில் பட்டா வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆய்வு மேற் கொண்டார்.  மேலும் அடுத்த மாதங் களில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்க உள்ளதால் மனு தாரர் வழங்கும் விண்ணப் பங்களை தாமதப்படுத்தா மல் அவர்களுக்கான குறை களை அறிந்து உடனடியாக விசாரணை செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பட்டா மாறுதல் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து கேட்டறிந்தார்.  வருவாய்த்துறையில் பட்டா மாறுதல், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். அலுவல கத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது  பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அதி களவில் கிடப்பில் போடப் பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் வருவாய்த் துறை ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது பல ஊழியர்கள் அலுவலகத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து உட னடியாக அவசர கூட்டத்தை கூட்டி கிடப்பில் கிடக்கும் மனுக்கள் மீது உரிய விசா ரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதேபோல் மாவட்டத் தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்க ளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.