districts

சென்னை முக்கிய செய்திகள்

வெயில் அதிகரிப்பு : நுங்கு விற்பனை அமோகம்

சென்னை,ஏப்.15- சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின்  உக்கிரம் அதிகரித்து வருகிறது.  சென்னையில் வெப்பநிலை 100  டிகிரியை எட்டியது. வெயிலை சமாளிப்ப தற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு  நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நுங்கு விற்பனையும் அதிகரித்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல  பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து  நுங்கு வெட்டப்பட்டு சென்னையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையின் பல பகுதிகளிலும் மதிய  வேளையில் நுங்கு விற்பனை அதிகரித் துள்ளது.   மணலி, விச்சூர், ஆரம்பாக்கம் ஆகிய  இடங்களில் விளையும் நுங்குகளை சென்னைக்கு கொண்டு வந்து அன்னக்கூடை களில் வைத்து விற்பனை செய்து வருகிறார் கள். தற்போது நுங்கு வரத்தொடங்கியுள்ள நிலையில் நுங்கின் விலை கடந்த ஆண்டை  விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது. 8 நுங்கின் விலை ரூ.50 முதல்  விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்கள் நுங்கை வாங்கி செல்கிறார்கள்.

தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

மதுராந்தகம்,ஏப்.15- மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் வேன் உள்ளிட்ட  வாகனங்களுக்கு மேட் மற்றும் சீட் தயாரிக்கும் தனியார் கம்பெனிகளில் இருந்து  வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி  செய்யப்படு கிறது. இந்த தொழிற்சாலை யில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.தொழிற்சாலையில் இருந்த குடோனில் தீ பரவியதால் அங்கிருந்த சுமார் 300 டன்  எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்க  மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்க ளும் பற்றி எரிந்தன.  மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியும் எரிந்தது.  எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்த தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமா னது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயல்திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

சென்னை,ஏப். 15 விவோ நிறுவனம் தற்போது புதிதாக அதிக செயல்திறன் கொண்ட டி மாடல் வரிசையில் புதிதாக டி2 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலும், தொழில்நுட்ப  ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையிலும் இவை வடிவமைக் கப்பட்டுள்ளன. இவை முறை வரும் 18 மற்றும் 21–ந்தேதி ஆன்லை னில் விற்பனைக்கு வருகிறது.  டி2எக்ஸ் 5ஜி மாடல் விலை  4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் ரூ.12,999  என்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் ரூ13,999 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி

போரூர்,ஏப்.15-  சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 45). இவர் நிதி நிறுவனம் நடத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் தொழில் நடத்தி வந்தார்.  இவர் தனது நிதி நிறுவனத்துக்காக சென்னையில் 5 இடங்களில் அலுவல கங்களையும் தொடங்கினார். ரூ.1 லட்சம்  முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்றும், பல  கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளி யிட்டார். இதை நம்பிய பொதுமக்கள் பலர்  சந்திரசேகரின் நிறுவனத்தில் லட்சக் கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வ தாக அவர் பொதுமக்களிடம் பணம் பெற்று  ரூ.100 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் பணத்தை இழந்த பலர்  ஏற்கனவே சந்திரசேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். வழக்கில் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்தனர். பணம் கட்டி ஏமாந்த வர்கள் அவரிடம் இருந்து பணத்தை எப்படி  திரும்ப பெறுவது என்பது தெரியாமல் தவித்த னர். இந்நிலையில் சந்திரசேகர் சென்னை  வானகரத்தில் உள்ள வீட்டுக்கு வந்திருப்ப தாக தகவல் பரவியது. இதனால் பணம் கட்டி  ஏமாந்த பெண்கள், பட்டதாரிகள் உள்பட  50-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை யன்று வானகரத்தில் உள்ள சந்திரசேகரின் வீட்டு முன்பு குவிந்தனர்.   திடீரென்று அவர்கள் சந்திரசே கரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுபற்றி மதுரவாயல்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீ சார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் மோசடி செய்த தொகை ரூ.100 கோடி என்ப தால் இந்த வழக்கு ஏற்கனவே மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்கள்.

சிறைவாசிகள்  உறவினர்களை  தொடர்பு கொள்ள காணொளி  வசதி

திருவள்ளூர், ஏப்.15- தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சென்னை புழல் மத்திய சிறை  பெண்கள் பிரிவில்,  காணொளி அழைப்பு சேவை திட்டத்தை தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பள்ளிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார், இதன் மூலம் சிறைவாசிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, மாதம் தோறும் ஒவ்வொரு சிறைவாசியும் 10 முறை தங்களது  குடும்பத்தினருடன் ஒவ்வொரு அழைப்பிற்கும் 12 நிமிடம் வரை பேசலாம்   என தெரிவித்துள்ள சிறை அதிகாரிகள்  இதன் மூலம் சிறைவாசிகளின் மன அழுத்தம் குறைவதோடு, அவர்களிடம் சீர்திருத்தத்தை மேம்படுத்த  உதவும் என  தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமையிட  காவல்துறை துணைத்தலைவர் கனகராஜ், சென்னை சரகம்  காவல்துறைதுணைத்தலைவர். நிகிலாநாகேந்திரன், சிறை கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

கூவம் ஆற்றில்  மூழ்கி ஓட்டுநர் பலி

சென்னை, ஏப்.15- சென்னை சைதாப் பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்தவர் எடிசன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.  48 வயதான அவர் சைதாப் பேட்டை பகுதியிலுள்ள கூவம் ஆற்றில் இறங்கியு ள்ளார்.  கரையில் இருந்து சிறிது  தூரம் உள்ளே சென்ற நிலை யில் எடிசன் திடீரென சேற்றில் சிக்கினார். கரை யில் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற் சிக்கு பலன் கிடைக்க வில்லை. எடிசன் தண்ணீரில்  மூழ்கினார். இதுபற்றி கோட்டூர்புரம் காவல்துறை யினருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் ரப்பர் படகுகளில் சென்று  எடிசனை தேடி பார்த்தனர். 3 படகுகளில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேடு தல் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆன நிலை யில் தேடும் பணியை தீய ணைப்பு படையினர் கைவிட் டனர். சனிக்கிழமையன்று  மீண்டும் தேடும் பணி நடை பெற்றது. இதில் தண்ணீரில்  மூழ்கி எடிசன் உயிரிழந் திருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு தீய ணைப்பு வீரர்கள் கரைக்கு 

வேலூர் பெண்கள் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன்  பேச வீடியோ கால் வசதி

வேலூர், ஏப். 15- தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 142 சிறைகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பதவி ஏற்ற பின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என சட்டசபையில் தெரிவித்திருந்தார். அதன்படி வெள்ளியன்று (ஏப். 14) சென்னை புழல் சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். கொரோனா காலத்தில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலூர் ஆண்கள் சிறையில் ஏற்கனவே வீடியோ கால் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேலூர் பெண்கள் தனி சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் சனிக்கிழமை (ஏப். 15) தொடங்கி வைத்தார். பெண் கைதிகள் தங்களது உறவினர்களிடம் 3 நாளைக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் பேசலாம். அல்லது மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம் என்ற வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

மதுவிற்ற பெண் கைது

காவேரிப்பாக்கம், ஏப். 15- ராணிப்பேட்டை மாவட்டம், பனப் பாக்கம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெண் ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்றுக் கொண்டி ருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து காவல் துறையினர் அவரை செய்து கைது செய்தும், அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் மற்றும் 2,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி முன்பு மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 15- ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள போலுப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவக்கப்பட்டது. இங்கு அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் தினசரி ஆயி ரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த சாலையில் இரவிலும ஆயி ரக்கணக்கான வாகனங்கள் செல்வ தால், மருத்துவமனை முன்பு அடிக் கடி விபத்துகளும், அதனால் பல உயிரிழப்புகளும் தொடர்ந்து நடை பெறுகிறது. எனவே சாலையை கடக்க மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும்  நிதி ஒதுக்கீடு செய்து அளவீடு உள்ளிட்ட ஆயத்த பணிகள் நடை பெற்றன. தற்போது மருத்துவக் கல்லூரியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் பாலம் அமைய உள்ளதாகத் தெரிகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் ஆணவக் கொலைகள்!

கிருஷ்ணகிரி, ஏப். 15- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தண்டபாணி (50). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர். சுபாஷ் திருப்பூரிலுள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரி வித்தனர்.  மேலும், அனுசுயா குடும்பத்தின ரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 27ஆம் தேதி திருப்பூரிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்ட னர். அதைத்தொடர்ந்து சுபாஷ், தனது மனைவி அனுசுயாவை அழைத்து கொண்டு வெள்ளிக்கிழமை(ஏப்.14) தனது வீட்டிற்குள் நுழைய முயன்றார். தனது எதிர்ப்பை மீறி தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தண்ட பாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள் ளர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா, தனது வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்துள்ளார். தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  அப்போது கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்டவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சுபாஷ், கண்ணம்மா இருவரையும் சரமாரியாக வெட்டி னார். இதனை தடுக்க வந்த மரு மகள் அனுசுயாவையும் அவர் சரமா ரியாக வெட்டினார். சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மருமகள் அனுசுயா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயி ருக்கு போராடி கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர்.


தொழிலாளி கைது

விழுப்புரம், ஏப். 15- விழுப்புரம் திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தெரு வில் விளையாடிக் கொண்டி ருந்தாள். அப்போது அங்கு வந்த விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த  கட்டிட தொழிலாளி ரகுமான் (25) அந்த சிறுமி சிறுமியை தனது வீட்டிற்குள் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல்  வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெரியம்மாவிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சேத்துப்பட்டு, ஏப். 15- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் ராமகிருஷ்ணன் (22). இவர் வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்துப்பட்டு காவல் துறையினர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.