சென்னை, பிப்.23 - சென்னை - விசாகப்பட்டினம் வழித்தடத்தில் கொந்தளிப்பான கடல் பகுதியில் கடுமையான படகுப் பயணத்தை மேற் கொண்ட முதலாவது மகளிர் பாய் மர படகுப் பயணக் குழுவினர் பிப். 23 அன்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் படகு பயணத்தை கடந்த 15 ஆம் தேதி யன்று தொடங்கினர். தென்னிந் திய தலைமையக ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.தாஹியா வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பயணக் குழுவினரை சென்னை துறைமுகத்தில் வரவேற்றார். எம்.சி.இ.எம்.இ, இ.எம்.இ படகு செலுத்தும் சங்கம், தெற்குப் பிரிவு ராணுவ படகு செலுத்தும் பிரிவு, ராணுவ சாகசப் பிரிவு ஆகியவை முதன் முறையாக இத்தகைய நிகழ்வை நடத்தியிருப்பதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். படகு செலுத்துதல் என்பது விளை யாட்டு மட்டுமல்ல இளம் பெண்க ளுக்கு ஊக்கமளித்து நாட்டுக்கு சேவை செய்யவும் இந்த படகுப் பயணம் உந்துசக்தியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள இந்தப் பயணம் மகளிருக்கு அதிகாரமளித்தலில் மேலும் ஒரு முன்னேற்ற நடவடிக் கையாகும் என்றும் அவர் கூறினார். இந்தப் படகுப் பயணம் முழு மைக்கும் இந்திய கப்பற்படை ஒரு படகை வழங்கி முழுமையான ஆதரவை அளித்தது. அதே போல் இந்தியக் கடலோர காவல் படை இந்தப் பயணம் முழுமைக்கும் தொடர்ச்சியாக சென்று தேவையான உதவிகளை செய்தது.