districts

img

வீடுகளை அகற்ற முயற்சி: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிதம்பரம்,டிச.14- சிதம்பரம் மந்தகரை அருகே உள்ளது தச்சன் குளக்கரை. இந்த பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை மற்றும் மாடி வீடுகளுடன் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்திரவிட்டதையடுத்து இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.  அரசு அதிகாரிகளின் நட வடிக்கைக்கு சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பாதிக்கும் மக்களுக்கு மாற்றும் இடம் கேட்டும், அதுவரைக்கும் வீடுகளை இடிக்காமல் இருக்கவும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியேரை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்தனர். இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி, வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி யில் வசிக்கும் பொது மக்கள் வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது சிலர் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பர நகர காவல்துறை யினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும்” என்றனர். இதனையடுத்து, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

;