districts

சென்னை முக்கிய செய்திகள்

இளநிலை மருத்துவ படிப்பில் 450 இடங்கள் காலி

சென்னை, செப்.8- அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அப்போது, கல்லூரிகளில் சேர்வதற்கு செப்.7 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. மாண வர்கள் சேராமல் காலியாக  இருக்கும் விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு மீண்டும்  கலந்தாய்வு நடத்தப்பட வுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 10 நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் 450க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி யாக உள்ளன. இந்த இடங்களை இந்திய மருத் துவ கல்வி ஆணையம் நிரப்பி வருகிறது.

கோவிலில் திருட்டு

திருத்தணி,செப்.8- சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.  வியாழன்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த  உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.  இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லாரி கவிழ்ந்து விபத்து: 80 லிட்டர் பால் வீண்

சென்னை, செப்.8- சென்னை கொரட்டூரில் உள்ள பால் பண்ணையில் இருந்து லாரி ஒன்று பால் ஏற்றிக் கொண்டு ஆவடி அருகே  வெள்ளானூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வெள்ளிக் கிழமை(செப்.8) அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருக்கும் போது, மாடுகள் குறுக்கிட்டன.  இதைக் கண்ட லாரி ஓட்டுநர் ஷாஜி (40) திடீரென்று பிரேக்  பிடித்த போது, எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது. இதில்  லாரியில் இருந்த 80 லிட்டர் பால் கீழே கொட்டி வீணானது.  இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து காவல் துறை யினர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

காலமானார்

 சென்னை, செப்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரு பார்க் கிளைச் செயலாளர் ம.குப்புவின் தாயாரும், அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர் ம.உதயக்குமாரின் பாட்டியுமான  என்.வெள்ளச்சி (செப்.8) அன்று காலமானார். நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திரு வேட்டை, இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், இ.சர்வேசன், வே.ஆறுமுகம், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் வே.இரவீந்திர பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வு அரும்பாக்கம் மயானத்தில் நடைபெற்றது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து  536 கன அடியாக அதிகரிப்பு

சென்னை, செப்.8- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 7) இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்ச மாக ஆவடியில் 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு  அதிகபட்சமாக 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 1,866 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.189  கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில்  2,688 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 429 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 128 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 48 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின்  மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடியில் 2,337 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர்  மற்றும் மழைநீர் சேர்ந்து 610 கனஅடி தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விருப்ப மனு கேட்க வேண்டும்

மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

சென்னை, செப்.8- வடசென்னை அனல்மின் நிலையம் நிலை-3 பணிகளுக்கு, தூத்துக்குடி அனல் மின் நிலைய தொழிலாளர்களிடம் விருப்ப மனு கேட்டது போல் எண்ணூர் அனல் மின்  நிலைய தொழிலாளர்களிடமும் அங்கு பணி செய்ய விருப்ப மனு கேட்க வேண்டும்  என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தி.ெஜய்சங்கர், பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு மின்  உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அனல் மின் நிலைய பொறியாளர், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3இல் உற்பத்தி தொடங்க  உள்ள நிலையில், அங்கு பணி செய்ய  களப்பணி ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்கள் விருப்ப விண்ணப்பம் அளிக்க லாம் என்று கோரியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணூர் அனல் மின் நிலையம் தனது உற்பத்தியை நிறுத்திய காரணத்தால் 300க்கும் மேற்பட்ட களப்பணி ஊழியர்கள், பொறியாளர்கள் சென்னையில் உள்ள 4 பகிர்மான வட்டங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் பணி முழுவதும் எண்ணூர் அனல் மின் நிலைய பணியாக இருந்தது. மின் பகிர்மான வட்ட பணிகளை செய்து  பழக்கமில்லாத அவர்கள் முழு கவனத்து டன், அர்ப்பணிப்புடனும் பணிகளை செய்ய இயலவில்லை. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு வகையான பணிகளை இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.  இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 3க்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களிடம் விருப்ப விண்ணப்பம் கேட்டது போல், எண்ணூர் அனல் மின் நிலைய தொழிலாளிகளிடம் கேட்க வேண்டும் என்றும், ஏற்கெனவே சீனியாரிட்டி, பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ் ஐ’ பரவுகிறது

பொன்னேரி,செப்.8- திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்க ளாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அள வில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  மெட்ராஸ் ஐ கண்நோய்க்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த கண்நோயால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் 2 வாரத்துக்கும் மேல் இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:- மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இது பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்பு கள் ஒன்றாகும். கண்ணின் விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது எளி தில் பரவக்கூடியது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்து வாங்கி ஊற்ற வேண்டாம். கண் நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் கண் கூசும் வெளிச்சத்தை பார்க்க வேண்டாம். நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. வெளியில் வெயிலில் அதிகம் செல்ல வேண்டாம். செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், குளிர்ச்சி யான நீர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாதிக்கப்பட்டவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வெளியில் சென்று வந்தால் கைகளை உடனடியாக கழுவ வேண்டும். இதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏரியில்  வாலிபர் பிணம்

விழுப்புரம், செப்.8- விழுப்புரம் மாவட்டம்,  காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (37). பூக்கடையில் வேலை செய்துவந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை(செப்.8) அதிகாலையில் மாம்பழப் பட்டு ஏரியில் மிதந்த உள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தர மூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்தனர்.உடனடி யாக காணை காவல் நிலை யத்திற்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சுந்தர மூர்த்தியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பதாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடம் மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்,செப்.8- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணி மாறுதல் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கான இடம் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூர் ஆர்.எம்.ஏ.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழனன்று தொடங்கியது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் 72 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தேர்வு செய்யலாம் என அறிவித்து ஏகாட்டூர், திருகூர் பள்ளிக்கு மட்டும் இரவு 8 மணியளவில் ஒதுக்கீடு செய்ததாக தெரிகிறது. இதனால் குறைவான இடத்திற்கு ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும் ஆர்கே பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் அறிவிப்பு தரவில்லை என்று உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

சென்னை, செப். 8- சென்னையில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர்களின் கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால் ரயில்வே இருப்பு பாதை காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நடைமேடைகளில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் நபர்கள் ரயில்வே காவல் துறையினரும், இருப்பு பாதை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவுரா மெயிலில் இருந்து வந்த ஒரு நபர் காவல்துறையினரைக் கண்டதும், பதுங்கிச் சென்றார். உடனே காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பதும், ஆந்திராவில் இருந்து 6 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பெரிய மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி,செப்.8- கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பகுதி தடவரை கிராமத்தை சேர்ந்த கரீம் மனைவி ரம்ஜா (80) இரவு வழக்கம் போல் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அருகில் இருந்த மண்ணெண்ணெய் பிளாஸ்டிக் கேன் கவிழ்ந்ததில் சேலையில் திடீரென தீப்பிடித்தது. அலறல் சத்தம் கேட்டு வீட்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தனர். திடீரென சேலை முழுவதும் தீப்பிடித்ததில் அதிகமான தீப்புண் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பிறகு, காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய் விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்கட்டில் தொங்கிய பயணம்: மாணவர்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரம்,செப்.8- விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் போது பேருந்துகளின் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில்  பள்ளி நேரங்களிலும், முடியும் நேரங்களில் அரசு பேருந்து போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருவக்கரையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தொரவி சோதனை சாவடியில் இறக்கிய காவல்துறையினர், போக்குவரத்து விதிமுறை குறித்தும், படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும் விளக்கினர். இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடிக்க உறுதிமொழி ஏற்க வைத்தார். மேலும் பேருந்து படிக்கட்டில் தொங்கி மாணவர்கள் பயணம் செய்யும் போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். காவல்துறையின் இந்த நிகழ்வு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.