கிருஷ்ணகிரி, ஜூன் 3-
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சீபம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னமாதையன். வெள்ளிக்கிழமை தனது 4 பசு மாடுகளை அப்பகுதி யில் உள்ள மேச்சல் நிலத் தில் மேய்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அங்கிருந்த மின் கம்பம் திடீரென சாய்ந்தது.
இதனால் மின் கம்பிகள் அறுந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி 4 மாடு களும் சம்பவ இடத்தி லேயே இறந்தன. இது குறித்து மின்சார வாரி யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டதன் பேரில் மின் வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை அகற்றினர். இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.