districts

திருவள்ளூரில் ரயிலில் அடிபட்டு 3 பேர் பலி

திருவள்ளூர்,ஜூலை 8-

     வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது 29). வெள்ளியன்று  வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது வீட்டார் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில்  ஜெபராஜ்   வேப்பம்பட்டு - திருநின்றவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிய வந்தது.

    அதேபோல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு முல்லை நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 35). லாரி ஓட்டுநரான வியாழனன்று  இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளியன்று காலை சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொரு சம்பவம் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.