districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 27வது ஆண்டு விளையாட்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  வேளச்சேரி பகுதி சார்பில் 27வது ஆண்டு விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழனன்று (ஜன.26) தரமணியில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 178வது வார்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கர், தரமணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலு, சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்,  பொருளாளர் திவாகர், பகுதி தலைவர் கோபி, மாணவர் சங்க தலைவர்கள் ஆர்.சுர்ஜித், குமரன், மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.