districts

img

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, ஜூலை. 8-

   ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே கைத்தறி நெசவாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  ஆலோசனை கூட்டம் எஸ்.கிட்டு தலை மையில் வாழைப்பந்தல் பகுதியில் சனிக் கிழமையன்று  (ஜூலை 8) நடைபெற்றது.

   இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, விசைத் தறி தொழிலாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

   இதில் எஸ். கிட்டு பேசுகையில், கைத் தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை அரசின் அனுமதி மீறி விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய  வேண்டும். கைத்தறி தொழிலை பாதுகாக் கும் அரசு அமலாக்க கண்காணிப்பு துறை முறையே செயல்பட வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும்  திங்களன்று (ஜூலை 10) ஆரணி  தர்மராஜா கோவில் மைதானத்தில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் பேரணி யாக சென்று  ஆர்டிஓ அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.