districts

100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றம்

வேலூர், ஜூலை 3-

     வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சாலையின் இருபுறமும் பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சியாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கிறது புளிய மரங்கள் இவை சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.

     தற்போது சாலை விரிவாக்க பணியில் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டு கூடுதலாக மரங்களை வெட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதிகமான மரங்கள் வெட்டி நடத்தப்படுவதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலையில் தற்போது வெயில் மட்டும் சுட்டெரிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

    எனவே அனுமதி வழங்கிய மரங்கள் மட்டுமே வெட்ட வேண்டும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வெட்ட வேண்டும் பசுமையாக இருக்கும் சாலையை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.