districts

img

காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி: 25 பேர் படுகாயம்  

காரைக்குடி அருகே சனிக்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.  

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள பூச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடியில் நடைபெறவிருந்த உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுற்றுலா வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.  

அப்போது வேன் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில், மணிமேகலை (55), தவப்பிரியா (22), பாப்பாத்தி (60) ஆகிய 3 பெண்களும் உயிரிழந்தனர். மேலும், 4 குழந்தைகளுடன் உட்பட 25 பேர் பலத்த காயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் ஒரு குழந்தை, தாய் மற்றும் ஆண் ஒருவர் என 3 பேர் கூடுதல் சிசிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த காரைக்குடி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.