“ஒருபெண் மிகக் குறைவான ஆடைகளை அணிந்திருந்தால், ஆண்கள் ரோபோக்கள் இல்லை. ஆதலால் அது ஆண்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்”.
ஆச்சரியமே வேண்டாம். இதைக் கூறியவர் நாட்டின் பிரதமர். இந்த ஒரு ஆயுதத்திற்குப் பின்னாலேயே இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் ஒளிந்து கொள்ளப் போகிறார்களோ தெரிய வில்லை. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதாக நினைத்துக் கொண்டு இத்தகைய சொற்களைக் கூறும் நபர்களுக்கு ஆங்கிலேயரிடம் நாடு அடி மைப்படும் வரை பெண்கள் எத்தகைய உடை அணிந்து வாழ்ந்தார்கள் என்பது குறித்த எந்த தெளிவும் இல்லை போலும். பழமை வாய்ந்த கோவில்களில் உள்ள சிற்பங்களை கவனித் தாலே பண்டைய கால பெண்களின் ஆடை முறைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். காலம் மாறிவிட்டது. கலாச்சாரம் மாறி விட்டது. ஒழுக்கம் குடும்பக் கட்டமைப்பில் முக்கி யத்துவம் பெற்றுவிட்டது. ஆகவே பெண்கள் இவ்வாறு தான் உடை அணிய வேண்டும் என்று கூறுகிறார்கள். பெண்கள் சிறிய ஆடை களை அணிவதால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகள அரங்கேறுகிறது என்று மன சாட்சியே இல்லாமல் கூவிக்கொண்டிருக்கி றார்கள். இப்படி பாலியல் கொடுமைகள் நடந்த பல சமயங்களில் அரசியல் தலைவர்கள் முதல் நாட்டின் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி கள் வரை பெரும்பான்மையானோர் இக்கருத் தையே கூறியுள்ளனர் என்று நாமும் அறிவோம்.
பெண்களின் உடையில் தான் தவறு என்றால், எட்டு வயது சிறுமி அப்படி என்ன ஆண் களைத் தூண்டக்கூடிய ஆடையை அணிந்தி ருந்தாள்? வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மருத்துவர் என்ன உடை அணிந்திருக்கக்கூடும்? பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் அத்தனை மாணவிகள் அப்படி என்ன ஆசிரி யரைத் தூண்டும வகையில் ஆடைகளை அணிந்திருக்க முடியும்? இறைவழிபாட்டிற்குச் சென்ற பெண்களும் சிறுமிகளும் அப்படி என்ன ஆடைகளை அணிந்திருக்கக்கூடும்?. அட இதற்கெல்லாம் சமாதானம் சொல்ல வேண்டாம். பிறந்து ஒன்பது மாதங்களேயான பச்சிளம் குழந்தை அப்படி என்னதான் ஆண்வர்க்கத்தினரைத் தூண்டும் வகையில் உடை அணிந்துவிட்டது கூறுங்கள். தான் ஒரு பெண் என்ற செய்தியை கூட உணர்ந்திராத, பெண் என்று கூட அழைக்க முடியாத பிஞ்சுக் குழந்தை அப்படி உங்கள் எண்ணங்களை எப்படித்தான் தூண்டியது? ஒருவரேனும் விளக்கம் கொடுப்பீரா?
“அண்ணா என்னை விட்டுவிடுங்கள் ” என்று காலில் விழுந்து கதறி அழுத பெண் சிறிய ஆடை அணிந்திருந்ததால்தான் அதைக் களையச் சொல்லி படம் பிடித்தார்களா? அவ்வளவு ஏன், இந்த பெருந்தொற்று ஊர டங்கு காலத்தில்கூட எத்தனை சம்பவங்கள் நெஞ்சை உடையச் செய்தன! காவல் துறையில் பணிபுரியும் பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை. முன்களப் பணியாளர் காவல் துறை அதிகாரி யால் துன்புறுத்தலுக்கு ஆளானார். தன் தந்தைக்கு உதவி வேண்டிய பெண் ஒருவர் தவறாகப் பயன்படுத்தப்பட்டார். தன் உணவகத்தில் வேலை செய்த பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து சித்ரவதை செய்தது, சிகிச்சைப் பிரிவில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் துறந்த தாய்க்கு நீதிகேட்டு மகள் வழக்கு, பதினைந்து வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது போன்ற சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனை..! இவை அனைத்திற்கும் ஆடைகள் தான் காரணமா? ஜூன் மாதம் மட்டுமே 194 பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்துள்ளதாக தேசியப் பெண்கள் ஆணையம் கூறியுள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனை பெண் களுக்கு நீதி கிடத்துவிட்டது? தண்டனை களைக் கடுமையாக்குங்கள் என்றால் பெண்களின் மீதான முறையற்ற விமர்சனங்க ளையும் வன்முறைகளையும் தான் பெருக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை குற்றவாளியாகவும் அக்குற்றத் தினை செய்த ஆணை மகா தியாகி போலும் சித்தரிக்கும் அற்புதமான பகுத்தறிவையும் (?) அபாரமான கல்வி அறிவையும் கொண்ட மிகச்சிறப்பான சமுதாயக் கட்டமைப்பில் நாம் வாழ்கிறோம் என்பதைத் தவிர வேறு என்ன கர்வம் வேண்டும் நமக்கு ? அதிலும் இன்றய இளைஞர் சமுதாயம் குறித்து சொல்வதற்கே இல்லை. எந்த சமூக வலைதளப் பக்கத்தை எடுத்தாலும் பெண்களை கேலி செய்தல், கொச்சைப்படுத்துதல், இழிவுபடுத்துதல் போன்ற கருத்துக்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அவைகளுக்குத்தான் வரவேற்பு கள் அதிகமாம். அப்படிப்பட்ட கருத்துக் களுக்குத் தான் லைக்குகளும் கமெண்ட்களும் குவிகின்றனவாம். இப்படித் தான் பாதிக்கப்பட்ட இடத்திலும் கூட, தானே குற்றவாளியாக சித்தரிக்கும் சமு தாயத்தில் பெண்களின் போராட்டமும் குமு றல்களும் நூலறுந்த பட்டமாகிவிடுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நடக்கும். அனைத்து குற்றங்களுக்கும் ஆடைகளையும் நடத்தையையுமே பகடையாக்குவீர்கள்?
சிறுவயது முதலே பெண்ணிடம் ஒழுக்கத்தை பாடம் புகட்டி வளர்க்கும் சமு தாயம் ஆணிடம் அப்படிப்பட்ட பாடங்களை ஒரு நாளேனும் கூறுகிறதா? ஆடைகளை சரி செய்யச் சொல்லும் சமுதாயம் ஆணின் பார்வை யையும் எண்ணத்தையும் சரிசெய்ய ஒருநாளே னும் முயன்றதா ? பெண்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லும் சமுதாயம் ஆணிடம் தன்னவளைத் தவிர வேற்றாளைத் தொடுவது தவறு என்று சொல்லிக் கொடுத்துத்தான் வளர்க்கிறதா? இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் ஆடை களின் பின்னால் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் குற்றவாளிகளையே ஞாயப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள்? தணிந்து நட! பெண்பிள்ளையாய் அமைதியாக இரு ! எதிர்த்துப் பேசாதே என்று போதிப்பதற்கு பதில், தப்பென்றால் எதிர்த்து நில் ! உன் உரிமைக்காகப் போராடு என்று போதித்திருந்தால் இத்தனை பாபாக்களும் இப்படிப்பட்ட மாஸ்டர்களும் வந்திருப்பார் களா? பாதிக்கப்பட்ட பெண் தான் பாதிக்கப் பட்டதைக்கூட வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையைத் தானே இந்த சமுதாயம் உருவாக்கியுள்ளது.
பெண்களுக்காக குரல் கொடுப்பது பெண்ணி யம் என்றால், பெண் உரிமைக்காகப் போராடு வது பெண்ணியம் என்றால், பெண்களை ஆதரிப்பதும் ஆணின் குற்றங்களை சுட்டிக் காட்டு வதும் ஆண்களின் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடுவதும் பெண்ணியம் என்றால் பெண்ணியம் பேசப்பட வேண்டியதே ! பெண் களால் மட்டும் அல்ல ஆண்களாலும்! அதற்காக பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உயர்ந்த வர்கள், பெண்களே சிறந்தவர்கள், என்று இல்லை. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் ! அவ்வகையிலும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை! கணவனுக்கு மனைவி சமமானவள், சகோதரனுக்கு சகோதரி சமமானவள்! ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகள் சமமான வர்கள் என்ற நிலைவரும் வரையில், பாதிக்கப் பட்ட பெண்தான் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் காரணகர்த்தா என்னும் நிலை மாறும் வரையில் ஆண்களாலும் பெண்ணியம் வளரட்டும்! சமநீதி துளிர்க்கட்டும்!