உதகை, பிப்.24- அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வசதிகளும் சென்றடை யும் வகையில் பணியாற்ற வேண் டும் என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., வெற்றி பெற்ற வேட்பாளர்க ளுக்கு வேண்டுகோள் விடுத்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூ ராட்சிகளில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடனான கலந்து ரையாடல் மற்றும் வாழ்த்து தெரி விக்கும் நிகழ்ச்சி உதகையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளர் முபராக் தலைமை வகித்தார். உதகை நகர செயலாளர் ஜார்ஜ் வரவேற்புரை யாற்றினார். தமிழக வனத்துறை அமைச்சர் க.ராமசந்திரன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், விசிக மாவட்ட செய லாளர் சகாதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு, பெள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி., நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைத் தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் மக் களுக்காக உழைப்பதற்கு வேறு வாய்ப்புகள் மற்றும் பணிகளை மாவட்ட கழகம் வழங்கும். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் மத் தியில் ஆள்வது என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதற்கு முன் உதார ணமே தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றி. நம் வெற்றி இந்தியாவிற்கே ஒரு செய்தி சொல்வதாக அமைந்துள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றத்தில் பல்வேறு திட்டங் கள் நிறைவேற்றப்பட்டாலும், உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற வர்கள் மூலமே நிறைவேற்ற முடியும். உங்களது வெற்றிக்கு கார ணம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாதாரண தொண்டர்களே. எனவே, தொண்டர்களையும், வாக்களித்த பொதுமக்களையும் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற வர்கள் மதித்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங் களை நிறைவேற்றும் போது, எவ் வித பாரபட்சமின்றி அனைத்து அடித்தட்டு மக்களுக்கும், அனைத்து வசதிகளும் சென்றடை யும் வகையில், பணியாற்ற வேண் டும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி கள் மற்றும் 11 பேரூராட்சி வார்டு களில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி வார்டு உறுப்பினர் கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.