தருமபுரி, ஜூலை 21- தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் தமி ழகத்திற்குள் நுழைகிறது என்றா லும் கூட, தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளம் இல்லாததால், விவ சாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மக்கள் வசித்து வருகின் றனர். விவசாயிகள் மழையையே நம்பியுள்ளனர். இந்த மாவட்டத் தில், காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகள் கடந்து சென்றா லும், விவசாயத்திற்கு பயன்படா மல் உள்ளது. காவிரி கரைபுரண்டா லும், மாவட்டம் வறட்சியாகவே உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத் தம் 4 லட்சத்து 49,777 ஹெக்டேர் பரப் பளவில் விவசாயம் நடைபெறுகி றது. ஆனாலும், அதில் ஒரு லட் சத்து 95,740 ஹெக்டேர் நிலங்கள் மட்டும் தான் பாசன வசதி பெற் றவை ஆகும். அதாவது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 சத விகித நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை ஆகும். மீதமுள்ள 56.48 சதவிகித நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம ்நடைபெறுகிறது.
மக்கள் தொகையில் 70 சதவிகி தத்தினர் விவசாயத்தையே நம்பி யுள்ளனர். மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வரு கிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. இதனால், பாப்பிரெட்டிப் பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட் டங்களில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாகாவதி, தொப் பையாறு, கேசா்குளே ஆறு, சின் னாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 8 நீர்தேக்கங்கள் மட்டுமே அமைந் துள்ளன. இவற்றை நம்பி சில ஆயி ரம் ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே பயிர் செய்ய முடிகிறது. இந்த நீர் தேக்கங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் இருக்கும்போது ஒரு போகம் விவசாய சாகுபடி மட்டுமே செய்ய முடியும்.
தருமபுரி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மழை பொழிந்தால் மட்டும் விவசாயத்தில் ஈடுபட முடியும் என்கிற நிலைதான் நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுக ளாக பருவமழை பொய்த்து கடுமை யான வறட்சி நிலவிவருகிறது. அதி லும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஏற் பட்ட வறட்சியால் பயிர்கள் மட்டு மல்லாமல், தென்னை, பாக்கு உள் ளிட்ட மரங்களும் காய்ந்துவிட்டன. இதனால், விவசாயிகள் கடுமை யான பாதிக்கப்பட்டனர். காவிரி உபரி நீர்த் திட்டத்தை நிறைவேற்றினால் தருமபுரி மாவட் டத்தில், மழையின்மையால், ஒரு புறம் விவசாயிகள் வேளாண் பணிக ளில் ஈடுபட முடியாத நிலை நீடிக்கி றது. ஆனால், மறுபுறம் கர்நாடகம், கேரள மாநிலங்களில் தொடர் மழை பொழியும்போது வெள்ள நீர் பெருக்கெடுத்து காவிரியில் ஓடுகி றது. இந்த வெள்ளநீர், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி யில் இருகரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடி, டெல்டா பகுதிக ளுக்குச் சென்று, பின்னர் கடலில் கலக்கிறது. ஆகவே, தருமபுரி மாவட்டத்தில், விவசாயத்தை காக்க, தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க, ஒகேனக்கல் வழியாக மழைக் காலங்களில் செல்லும் 3 டிஎம்சி காவிரி உபரி நீரை, நீர் ஏற்றம் திட்டம் மூலம், 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளில் நீர் நிரப்ப முடியும். காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் ஆயிரம் கிலோ மீட்டர் நடைப யண பிரச்சாரம் மார்க்சிஸ்ட் கட்சியி னர் சார்பில் தருமபுரி மாவட்டத் தில் நடைபெற்றது. இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒகேனக்கல் லிலிருந்து காவிரி உபரிநீரை ஏரிக ளுக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஓராண்டுகாலமாகியும் இத்திட்டத் திற்கான நிதி ஒதுக்கவில்லை, அதற் கான அறிவிப்பும் இல்லை. எனவே, உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தருமபுரி விவசாயிகளின் எதிர்ப் பார்ப்பாக உள்ளது.