ஈரோடு, ஜன.31- கொடுமுடி – கரூர் சாலையில் ஏற் பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் கரூர் செல்லும் சாலையில் பள்ளம் ஏற் பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இந்த பள்ளம் சரிசெய்யப்படாமல் உள்ளதால், இருசக்கர வாகனங்க ளில் செல்வோர் விபத்துக்குள்ளா கின்றனர். மேலும், அவ்வபோது இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பள்ளம் ஏற்பட்டுள்ள சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.