districts

img

இருதரப்பு பிரச்சனையைத் தீர்த்து சமூக அமைதியை நிலைநாட்ட அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

அவிநாசி, பிப். 25 - அவிநாசி ஆகாசராயர் கோயில் பிரச்ச னையில் இரு தரப்பினரை அழைத்துப் பேசி  சமூக அமைதியை நிலைநாட்டி பிரச்சனை யைத் தீர்க்க மாவட்ட ஆட்சியர் முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சி கள் வலியுறுத்தி உள்ளன. அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று முன் னாள் ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வா கிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏ.வி.தனபால் (அதிமுக), பி.கோபால்சாமி (இ. காங்கிரஸ்), அ.ஈஸ்வரமூர்த்தி (சிபிஎம்), ஆர். முத்துசாமி (சிபிஐ), பாபு (மதிமுக), பிரசாந்த்குமார் (தேமுதிக) சி.வெங்கடா சலம் (விசிக), ராஜ்குமார் (கொமதேக) உள் ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: அவிநாசி ஒன்றியம், வேலா யுதம்பாளையம் ஊராட்சி, வேலாயுதம்பா ளையத்தில் பழமையான ஸ்ரீ ஆகாசராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது இந்து  சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட் டில் உள்ள கோவிலாகும். சித்திரை மாதம்  அவிநாசி அருகேயுள்ள ராயம்பாளையத்தி லிருந்து மண் குதிரை கொண்டு வந்து வைத்த  பின்னால் திருவிழா நடப்பது வழக்கம். இக் கோவிலில் காலங்காலமாக அனைத்து சமூ கத்தினரும், பொங்கல் வைத்து, ஆடு, கோழி  போன்றவற்றைப் படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்து  சமய அறநிலையத் துறையின் அனுமதி யின் பேரில், கும்பாபிசேக திருப்பணிகள் தொடங்கி, தாமதமாக ஒன்றரை வரு டங்களாக நடந்து வருகிறது. இதற்கு, உள்  பிரகாரத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவ ருடன் கூடிய அலங்கார வளைவு தான் இந்த  கால தாமதத்திற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது. ஏனெனில், ஒரு சமூகத்தினர் மேற் கண்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து கோவிலின் முன்பக்கம் ஒரு அலங்கார  வளைவை கட்டி வருகின்றனர். ஆனால், திருக்கோவில் கும்பாபிசேக பணிகளை முழுமையாக கவனித்து வரும்,  அவிநாசிலிங்கேசுவரர் கோவில் செயல் அலு வலர் இரு தரப்பினரையும் அழைத்து பேசி  பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளா மல், கண்டும் காணாமல் மெத்தனப் போக்கு டன் செயல்படுகிறார். இதை சிலர், தங்க ளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  சமூக பிரச்சினையாக மாற்ற முயற்சி மேற் கொள்கின்றனர். இதனால் இரு தரப்பினரி டையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு  கொடுத்தும் சமூக ஒற்றுமைக்கான கூட்டம்  நடத்த வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை யும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு  இங்கு சமூக பிரச்சனைக்கு காரணமான அதி காரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப் பதுடன், இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள  பிரச்சினையை தீர்த்து சமூக அமைதியை நிலை நாட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில்  கேட்டுக்கொண்டுள்ளனர்.