கோவை, நவ.5- கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை ஒன்றிய அரசு கிடப்பில் போட் டுள்ளதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற் றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கர் பரப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கான தொழிற்பூங்கா அமையவுள்ளது. இந்நிலையில், தொழிற் பூங்கா இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செவ்வாயன்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுமைக்கும் தொழிற்கூடங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவை அமையும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. கோவையை பொறுத்தவரை இந்த தொழிற்பூங்கா மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கும். விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ.2 ஆயிரம் கோடி அளித்து நில உரிமையாளர்களிடம் நிலங்களை பெற்று, ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துள்ளோம். இருப்பினும் அதற்கான பணிகளை மேற் கொள்ளாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட் டுள்ளது. தொழிற்பூங்காவிற்கான நீர் ஆதா ரங்களை திருப்பூர் மாவட்டத்திலிருந்து பெற உள்ளதாகவும், இங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறாமல் மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படும். மேலும், தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்கினால், அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்ச விலை வழங்கப்படும், என்றார்.