districts

img

உதகை மலை ரயிலை தனியாருக்கு தாரைவார்ப்பதா? ரயில் மறியிலில் ஈடுபட்டோர் கைது

மேட்டுப்பாளையம், டிச.12- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த மலை ரயிலானது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்க ளாக இயக்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் ஓட்டல் நிறுவனமொன்று மலை ரயிலை ஒட்டு மொத்த மாக ஒப்பந்தம் செய்து கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் இயக்கியது. அப்போது, நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலின் அடையாளத்தை மாற்றி யதுடன், தனது நிறுவனத்தின் லோகோவை ரயிலின் முகப்பில் ஒட்டிருந்தது.

இதேபோல் ரயிலில் பயணித்தோரி டம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூ லித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இச்செயலுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி யினர், பொதுநல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில், சனியன்று (டிச.12) மீண்டும் அதே தனி யார் ஓட்டல் நிர்வாகத்தால் மலை ரயில் இயக்கப்பட்டது. இதனை கண்டித்தும், உலக பாரம்பரிய சின்னமான மலை ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்தும் மலை ரயில் மீட்புக்குழு தலைமையில் சனியன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து அர சியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேட்டுப் பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டவர்கள் ரயில் நிலையம் அருகே செல்ல முயன்ற னர். அப்போது ரயில் நிலையம் எதிரே தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

;