districts

img

அடிப்படை வசதிக்கு ஏங்கும் பழங்குடி மக்கள் - - பி.ராமகிருஷ்ணன்

இயற்கையோடு இயந்து வாழ்ந்த பழங்குடி மக்களை, ஆழி யாறு அணை கட்டும் திட்டத்திற்காக  அடிவாரத்தில் கீழ் இறக்கிய ஆட்சி யாளர்கள், இன்னமும் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படா மல் அவதிக்குள்ளாக்கி வருவது அவலத்தின் உச்சம். எழில்மிகு இயற்கை காட்சிகள்  கொண்ட ஆனைமலை அடிவாரத் தில் அழகிய ஆழியார் அணை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் பாசனத்திற்கு பயன்படும் வகையில் 1959 ஆம்  ஆண்டு முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் அணை  ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.  ஆழியார் அணை கட்டுமானத்திற்கு முன்னர் அங்கு வசித்த எரவாளர்  மற்றும் மலமலசர் பழங்குடி சமூ கத்தை சேர்ந்த சுமார் 230 குடும்பங்களை எந்த மாற்று ஏற்பா டும் செய்யாமல் வெளியேற்றினர்.  பின்னர், அருகிலுள்ள புளியங் கண்டி, நவமலை, அன்பு நகர்  என்பன உள்ளிட்ட வெவ்வேறு பகு திகளில் குடியமர்த்தபட்டனர்.  பின்னர், நீண்ட வருடங்கு ளுக்கு பின்னர் 1999 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் அம் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட் டிக்கொடுக்கப்பட்டது. இது தற் போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. வீடு மட்டுமல்ல பழங்குடி  மக்களின் வாழ்வும் இடிந்துதான் போய் உள்ளது.  தொகுப்பு வீடுகளுக்கு தற் போது வரை மின்சாரம், குடிநீர் குழாய், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையே உள்ளது. வீடுகளில் மேற் கூரையின் சிமெண்ட் பூச்சு  பெயர்ந்து விழுந்து இதுவரை  பலர் காயம் அடைந்துள்ளனர்.‌ அந்த வீடுகளில் அச்சத்துடனனே  அம்மக்கள் வசித்து வருகின்றனர். வெளியே தூங்கினால் யானை,  சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குக ளின் தாக்குதல் அச்சத்தால், வீட்டில்  தினமும் உயிரை கையில் பிடித்து  கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.  இதுகுறித்து, புளியங்கண்டி பழங்குடி மக்களின் மலைக்குழு ஊர் தலைவரும், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் ஆனை மலை தாலுகா தலைவர் லோகநா தன் கூறுகையில், இது நாள் வரை  3 கிலோ மீட்டர் துாரம் உள்ள ஆழி யார் அணை அருகே உள்ள கழிப் பறை சென்றுதான் பயன்னடுத்தி  வருகிறோம். பெண்கள் நிலை பரி தாபத்திற்குறியது. அதிலும் இரவு  நேரங்களில் கழிப்பிடம் செல்ல  வேண்டும் என்றால் காட்டு விலங்கு கள் தாக்கும் அபாயமும் உள்ளது.  எங்களுடைய தொடர் போராட்டத் திற்கு பிறகு தற்போதுதான் புதிதாக  கழிப்பிடம் அரசால் கட்டிகொடுக்க பட்டது. ஆனால் இன்னும் திறக்கப டாமல் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் தலை மையில் நடத்திய தொடர் போராட் டங்களின் விளைவாகவே எங்க ளுக்கு நியாயவிலை கடை, ஆரம்ப  பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளும் கிடைத்துள் ளது. தற்போது, இங்கு 60 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர் 41 குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் கட்டி கொடுக்க பட்ட தொகுப்பு வீடுகள் சேதம டைந்த நிலையில் மாற்றாக புதிய  வீடுகள் கட்டித்தருவதற்கும் தொடர் முயற்சிகளை எடுத்து வரு கிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம். புதிய குடியிருப்புகளை மின்சார வசதி குடிநீர் குழாய் மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டித் தரும்படி வலியு றுத்தியுள்ளோம் என்றார். மேலும், இங்குள்ள சூழலில்  பள்ளிக்கு செல்லும் மாணவர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து  வருகிறது. அங்குள்ள குடும்பங்க ளில் தற்போது வரை இரண்டு பெண் கள் மட்டுமே நர்சிங் வரை படித் துள்ளனர். புளியங்கண்டியில் செயல்பட்டு வரும் ஆரம்பப்பள்ளி யில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே  உள்ளது. இதனாலேயே அப்பள்ளி யில் 5 ஆம் வகுப்புவரை படித்து  விட்டு கூலி வேலைக்கு சென்றுவி டுகின்றனர். பள்ளியை 8 ஆம்  வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும். பள்ளி கட்டிடத் திற்கு ஒரு பக்கம் சுற்றுச்சுவர் இல் லாமல் உள்ளது. அதனை கட்டித் தர வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பி னர் பவுலீனா கூறுகையில், அன்றா டம் கூலி வேலை செய்துவரும் பழங் குடி மக்களுக்கு தினமும் வேலை  கிடைப்பதில்லை. அரசிடம் பழங் குடி மக்களின் பொருளாதார மேம் பாட்டிற்கு பல திட்டங்கள் இருந்தும்  புளியங்கண்டி பழங்குடி மக்க ளுக்கு எந்த திட்டங்களும் வந்து சேர் வதில்லை. இதுகுறித்த விவரங்க ளும் இம்மக்களுக்கு தெரிவ தில்லை. பேரூராட்சி பகுதியை கார ணம் காட்டி 100 நாள் வேலையும் அவர்களுக்கு தருவதில்லை. கொரேனோ காலகட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவர் களை கடுமையாக பாதித்துவிட் டது. அவர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக தொழில் பயிற்சியும் கூடுதல் கடன்  வழங்கியும் சுய தொழிலை ஊக்கு விக்க வேண்டும். அனைவரது நல னிலும் மேம்பாடுகளிலும் அக்கறை  செலுத்துவதாக சொல்லும் திமுக  அரசு, பழங்குடி மக்களின் மேம்பாட் டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

;