கோவை, அக்.17– ஈஷா மையத்தின் சட்டவிரோத கட்டி டங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்க ஒன்றிய மோடி அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய் திருந்த நிலையில் அதனை எதிர்த்து சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் பெரியாரிய, முற் போக்கு, ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட் டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. தங்க ளுக்கும் அனுமதி வேண்டும் என இந்து முன் னணியினர் கச்சை கட்டி நின்றனர். ஆனால், இடதுசாரி, பெரியாரிய அமைப்பினர் ஆயிரக் கணக்கானோர் திரண்டதால் இருந்த இடம் தெரியமால் இந்து முன்னணியினர் ஓட்டம் எடுத்தனர். மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதி களில் அன்றாடம் மனித-விலங்கு மோதல் நடைபெறுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா, காருண்யா, மாதா அமிர்தனாயி உள்ளிட்ட பல்வேறு நிறு வனங்கள் வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சூழலியலுக்கு கேடு விளை வித்து வருகின்றன. வனத்தை காப்பதற்கு பதி லாக ஒன்றிய மோடி அரசு வனத்தை ஆக்கி ரமித்து கட்டிடங்களை எழுப்பிய ஈஷா மையத்தை பாதுகாக்க முயற்சிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஈஷாவின் சட்டவிரோத கட்டி டங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவ தால், விலக்கு அளிக்கலாம் என நீதிமன்றத் தில் முறையீடு செய்துள்ளது. இது சூழலிய லாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும். சூழலி யலை காக்க வேண்டும் என்கிற அக்கறை யோடு இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய ஜனநாயக இயக்கங்களின் சார்பில் ஆயிரக் கணக்கனோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஆலாந் துறையில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை சீர்குலைக்க இந்து முன்னணி முயற்சி மேற்கொண்டது. ஆலாந்துறையில் ஆர்ப்பாட்டத்திற்கு இடதுசாரிகள் அனுமதி கேட்ட அதே இடத்தில், அதே தேதி, நேரத் தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் திட்டத் தோடு, சுவரொட்டி, துண்டறிக்கை அடித்து இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவாரங் கள் பிரச்சாரம் செய்தனர்.
இதுபோன்ற ஆயிரமாயிரம் சீர்குலைவு சக்திகளை நேருக்கு நேராக சந்தித்து வளர்ந்த இடதுசாரி இயக்கங்கள், ஈஷாவிடம் வாங் கிய காசுக்கு கூவுகிற இந்து முன்னணி உள் ளிட்ட சங்கிகளின் திட்டத்தை நேரிடையாக சந் திப்பது என முடிவெடுத்தனர். இதனைய டுத்து ஞாயிறன்று காலை 10 மணி அளவில் வெறிச்சோடிய சாலையாக இருந்த ஆலாந் துறை சாலையில், 10.30 மணிக்கு எங்கிருந்து வந்தார்களோ, எப்படி வந்தார்களோ என காவல்துறையினரே ஆச்சரியத்தோடு பார்க் கும் வகையில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி உள்ளிட்டோர் தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஎம், சிபிஐ, விசிக, தபெதிக, திக, திவிக மற்றும் வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக கூடினர். அதே தேதியில், அதே இடத்தில், அதே நேரத்தில் நாங்களும் ஆர்ப்பாட்டம் நடத்து வோம் என அறிவிப்பு செய்த இந்து முன் னணி உள்ளிட்ட சங் பரிவாரங்களின் சுவடைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. சூழலியலுக்கு எதிராக, ஈஷாவுக்கு வக் காலத்து வாங்க நினைத்த இந்து முன்னணி யினர் முக்குடைபட்டு நின்றது அப்பகுதி மக்களிடம் சிரிப்பாய் சிரிக்கிறது.