திருப்பூர், ஜூலை 5- அரசுப்பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி காளிவேலம்பட்டி கிளை சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். 3 வாரங்களில் போக்கு வரத்து வசதி ஏற்படுத்தி தருவதாக அரசுப் போக்குவரத்து கழக மேலாளர் உறுதியளித்த தையடுத்து போராட்டத்தை ஒத்திவைப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். பள்ளி நேரத்தில் காளிவேலம்பட்டியில் இருந்து சாமிக்கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டி பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து கழகம் பல்லடம் கிளையில் 5 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,செவ்வாயன்று காலை 12 மணி அளவில் பல்லடம் காவல்துறை ஆய் வாளர் முன்னிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண்டல வணிக மேலாளர் மற்றும் பல்லடம் கிளை மேலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நிர்வாக ஏற்பாடுகள் செய்ய வேண்டி உள்ளதால் 3 வாரங்கள் கால அவகா சம் வேண்டுமெனவும், பின்னர் போக்குவ ரத்து வசதியினை ஏற்படுத்தித் தருகிறோம், என உறுதியளித்தனர். இதையடுத்து, தற்கா லிகமாக போராட்டம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் அளித்த உறுதியின் அடிப்படையில் பேருந்து கள் இயக்கவில்லை என்றால், பல்லடம் பணி மனை முன்பு மீண்டும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சி.முருகேஷ், மாணவர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ச.பிரவீன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.