districts

img

எழில் கல்குவாரி உரிமம் தற்காலிக ரத்து: விவசாயி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

திருப்பூர், செப். 8 - பல்லடம் அருகே கோடங்கிபாளையத் தில் விதிமுறை மீறி இயக்கப்பட்டு வந்த  எழில் கல்குவாரியின் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்து உத்த ரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த 10  நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டி ருந்த விவசாயி விஜயகுமார் உண்ணாவிரதத் தைக் கைவிட்டார்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் அரசின் நிபந்தனைகளை மீறி இயக்கப்பட்டு வரும் எழில் புளூ மெட்டல்ஸ் குவாரி, எம் சாண்ட், ஜல்லி கிரசர் ஆலைக்கான அனுமதியை  ரத்து செய்யக் கோரி ஆகஸ்ட் 30ஆம் தேதி  விவசாயி விஜயகுமார்  என்பவர் தனது தோட் டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத் தைத் தொடங்கினார். 10 நாட்களாக உண்ணா விரதம் நீடித்து வந்த நிலையில் பல்வேறு தரப் பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த னர். 

வலிமை பெற்ற போராட்டம்

இவரது போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த திங்களன்று கல் குவாரியில் குதிக் கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசா யிகள் அமைப்பினர் அறிவித்தனர். அப்போது  காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி  போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். இதனி டையே அந்த கல் குவாரியில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பத்து  நாட்களாக விஜயகுமாரின் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவருக்கு ஆதரவாக 25 விவசாயிகள் வெள்ளிக்கிழமை முதல்  தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாகவும் அறிவித்தனர். நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரின் ஆதர வுடன்  போராட்டம் வலிமை அடைந்து வந் தது. இந்நிலையில் பல்லடம் வட்ட அளவி லான கண்காணிப்புக் குழுவினர் மேற்படி எழில் புளுமெட்டல் நிறுவனத்தில் புலத்த ணிக்கை செய்தனர். அவர்கள் அளித்த அறிக் கையின் அடிப்படையில் அந்த கல்குவாரி யின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் புதன்கிழமை  உத்தரவிட்டார். 

புலத்தணிக்கை விபரம்

வட்ட அளவிலான சிறப்புக் குழுவினர் மேற்கொண்ட கூட்டுப் புலத்தணிக்கையில், எழில் புளூமெட்டல் நிறுவனத்தின் கல்  அரவை நிறுவனத்தில் இருந்து வெளியே றும் துகள்கள் காற்றில் பரவாமல் இருக்க  நீர் தெளிப்பான்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் இயக்குமாறும், தகுந்த காற்று மாசு தடுப்பு சாதனங்களை முறையாக இயக்க அந்த குவாரி உரிமையாளருக்கு அறிவுறுத்தலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குவாரியில் வெட்டியெடுக்கப்பட்ட குவாரியின் அளவு கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. விஜயகு மார் உண்ணாவிரதம் இருந்து வருவதுடன், குவாரியில் உள்ள குழியில் விழுந்து தற் கொலை செய்து கொள்வதாக கூறி போராட் டம் மேற்கொண்டு வருவதாலும் இப்பகுதி யில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காவல் துறை சார் பில் கூறப்பட்டுள்ளது.  வருவாய்த் துறை அளித்த அளிக்கை யில், குவாரி குத்தகைக்கு உரிய நிபந்தனைப் படி பட்டா நிலங்களுக்கு 7.5 மீ பாதுகாப்பு  இடைவெளி விட்டு குவாரிப் பணிகள் மேற் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அந்த நிறுவனத்தார் கடைப்பிடிக்கவில்லை. பசுமை வளையங்களாக மரங்கள் வளர்க்கப் படவில்லை என்றும் புலத்தணிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு நடவடிக்கை கள் ஏதும் ஏற்படாமல் இருக்க எழில் புளு மெட்டல் உரிமையினை தற்காலிகமாக நிறுத் தம் செய்து உத்தரவிடலாம் என்று பல்லடம் வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு தலை வர் என்ற முறையில் பல்லடம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரை மற்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமீறல்களின் பேரில், எழில் புளூமெட்டல்ஸ் உரிமத்தை தற் காலிகமாக நிறுத்தி வைத்து ஆணையிடப் பட்டுள்ளது.

உண்ணாவிரதம் முடிவு

இதையடுத்து விவசாயி விஜயகுமாரை பல்லடம் வட்டாட்சியர் வியாழக்கிழமை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் பிறப் பித்த உத்தரவு நகலை அளித்தார். இதன் அடிப்படையில் தனது உண்ணாவிரதத்தை விஜயகுமார் தற்காலிகமாக முடித்துக் கொள் வதாகத் தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார். பல்லடம் வட் டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்  அவருக்கு பழச்சாறு வழங்கி உண்ணா விரதத்தை முடித்து வைத்தனர். மேலும் நிரந் தரமாக குவாரி உரிமத்தை ரத்து செய்வதாக  உறுதியளித்து உள்ளதால் வெள்ளிக்கி ழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அறிவிக்கப்பட்டிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.  அதேசமயம், மற்றொரு விவசாயி குமார்  எஸ்.ஜி. புளூ மெட்டல்ஸ் என்ற கல்குவா ரியால் பாதிக்கப்பட்டு மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்து வருகிறார். அவருடைய கோரிக் கையை ஏற்று அந்த கல்குவாரியின் உரிமத் தையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

;