districts

img

தலித் மக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்திடுக

கோவை, செப்.30 -  சூலூர் தாலுகா, இருகூர் பகுதியில் தலித் மக்களுக்கு ஒப் படைக்கப்பட வேண்டிய நிலத்தை உரிய முறையில் அளவீடு செய்து  உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கோவை மாவட்ட  ஆட்சியரிடம் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் இவ் வமைப்பின் தலைவர் யு.கே.சிவ ஞானம், செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, பொருளாளர் மகேஷ் வரன் மற்றும் சூலூர் தாலுகா செய லாளர் சுப்பிரமணி ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளதாவது, கோவை சூலூர் தாலுகா, இருகூர் கிராமத்தில், க.ச.எண். 189/1ஏ, க.ச.எண்.190/1ஏ, க.ச.எண். 192/2, க.ச.எண்.194/2 ஆகிய நிலத் தினை தலித் மக்களுக்கு வீட்டு  மனையிடங்கள் வழங்குவதற்காக வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் மூலமாக நிலம்  கையகப்படுத்தப்பட்டது. கடந்த  20 ஆண்டுகளுக்கு முன்பாகவே பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு பட்டாவும் வழங் கப்பட்டது. இந்நிலையில், மேற் படி ஆதிதிராவிடர் நல அலுவல கத்தின் உத்தரவினை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றம் சென்ற நிலை யில், மேற்படி இறுதி செய்யப்பட்ட  பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வதில் காலதாமத மானது. இதனிடையே சென்னை  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்  இருந்த அனைத்து வழக்கு களும் முடிவு பெற்ற நிலையில்,  சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு  வீட்டுமனையினை ஒதுக்கீடு செய்ய  காலதாமதம் ஆன நிலையில்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அன்றைய சங்கத்தின் தலைவர் பி.சம்பத்  மற்றும் கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  தலைமையில் குடியேறும் போராட் டம் நடைபெற்றது. 

இதனையடுத்து பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அதி காரிகள் சில வழக்குகள் நிலுவை யில் உள்ள காரணத்தினால் மேற்படி வழக்குகளை சீக்கிர மாக முடித்து விட்டு சம்பந்தப்பட்ட  பட்டா பயனாளிகளுக்கு வீட்டு மனையினை விரைவில் ஒதுக்கீடு  செய்யப்படும் என்று உறுதி யளித்தனர். ஆனால் இன்று வரை இப்பணிகள் நிறை வேறவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன் தலைமையில், திட்டப்பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு இருகூர் கிராமத்திற்கு சென்றார். இதில், பட்டா பயனாளிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பி னரை நேரில் சந்தித்து இது குறித்து முறையீடு செய்தனர். உடனடியாக அருகில் இருந்த  சூலூர் வட்டாட்சியரிடம் இது  குறித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்கவில்லையென்றால் செப்டம்பர் 30 தோழர் சீனிவாசராவ் நினைவு நாளில், பட்டா பயனாளி களுடன் குடியமர்வு போராட்டம்  நடைபெறும் என்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., அறிவித்தார்.  இந்நிலையில் மேற்படி இடம் சம்பந் தமாக சூலூர் வட்டாட்சியர் அவர்கள் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு மேல்நடவடிக்கைக்காக கடிதம் ஒன்றினை அனுப்பியுள் ளார். இருகூர் கிராமத்தில் மேற் படி ஏற்கனவே தலித் மக்களுக் காக பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்ட  நபர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட உடனடியாக இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கும்படி அறிவு றுத்தியுள்ளார்.