districts

மலைவாழ் மக்களை சாதியைச் சொல்லி திட்டி இழிவுபடுத்திய வனக்காவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், செப்.25 - மலைவாழ் மக்களை சாதியைச் சொல்லி திட்டி இழிவுபடுத்தி, அவர் கள் வாகனத்தில் செல்லக் கூடாது என்று அத்துமீறி, அராஜகமாக நடந்து கொண்ட வனக்காவலர் காளி தாஸ் மீது சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட மலைவாழ் மக்கள் சங் கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக் கள் சங்கத் தலைவர் கே.குப்புசாமி, பொருளாளர் என்.மணிகண்டன் ஆகியோர் செவ்வாயன்று இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: கடந்த 22-ஆம் தேதி குருமலை வன குடியிருப்பில் வசிக்கக்கூடிய தளி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கோ.செல்வனின் வாக னம் குறுமலையில் பழுதாகி நின்று விட்டது. மலைவாழ் மக்களின் வாழ் வாதாரமாக இருக்கும் புல் தைலம்  காய்ச்சும் இயந்திரமும் பழுதாகி இருந்தது. இவற்றை சரி செய்வ தற்கு திருப்பூரைச் சேர்ந்த முருகா னந்தம் மற்றும் அவருடைய உதவி யாளரும், வாகனத்தை பழுது பார்க்க  உடுமலையை சேர்ந்த பென்ஸ் ஒர் க்ஷாப் மெக்கானிக்கல் சுதாகர் மற்றும்  பிரகாஷ் ஆகியோருடன் குருமலை வருவதற்கு வனத்துறையின் தளிப் பிரிவு வனவரிடம், பேரூராட்சி துணைத் தலைவர் செல்வன் தகவல்  தெரிவித்து அவரிடம் வாய்மொழி உத்தரவு பெற்று முருகானந்தத்தின் காரில் நான்கு பேரும் அப்பர் ஆழி யாறு வரை வந்தனர். வரும் வழி யில் அட்டகட்டிக்கு அருகில் உள்ள காடம்பாறை பிரிவு வனசோதனை சாவடியில் வண்டி எண், விலாசம் பதிவு செய்துவிட்டு குருமலைக்கு வருவதற்கான காரணத்தையும் தெரிவித்துவிட்டு, மீண்டும் தளி பிரிவு வனவரிடம் சோதனை சாவடி யில் இருக்கும் காவலர்கள், இவர்கள்  செல்வதற்கு அனுமதி உண்டா என்று  உறுதிப்படுத்திக் கொண்டு குரும லைக்கு அனுப்பி வைத்தனர் அவர் கள் குருமலை வந்து வாகனத்தை சரி  செய்துவிட்டு தைலம் காய்ச்சும் இயந் திரத்தின் பழுதுகளையும் சரி செய்து விட்டு செப். 23ஆம் தேதி திங்களன்று  செல்வனுடைய அப்பாவின் வாக னத்தில் திரும்பி அப்பர் ஆழியார் சென்றனர். அப்போது அப்பர் ஆழி யார் அணை அருகே காளிதாஸ் என்ற  வனக்காவலரும் மற்றும் அவரோடு  இரண்டு மதுவிலக்கு காவலர்களும்  ரவுண்டானாவில் அமர்ந்திருந்தனர் அப்போது மது போதையில் இருந்த  வனகாவலர் காளிதாஸ் மெக்கானிக் கல் வரும் வாகனத்தை மறித்து, “யாரைக் கேட்டுடா உள்ள போனீங்க? எப்படி உள்ளே போக  முடியும், தளி பேரூராட்சி துணைத் தலைவர் சொன்னா அவன் பெரிய புடிங்கியா? புலையனுக்கெல்லாம் பதவி வந்திருச்சு என்ற திமிருலும், ஆணவத்திலும் ஆடுறீங்கடா!” என்று சொல்லி கடுமையாக இழிவுபடுத்தித் திட்டியதோடு. உடன் வந்த காட்டுப்பட்டியை சேர்ந்த பூபாலன் மற்றும் மதுபாலன் ஆகிய இருவரையும் ஜாதி பெய ரைச் சொல்லி திட்டினார். “எந்த அதிகாரியிடம் அனுமதி பெற்றா லும் என்னிடம் அனுமதி பெறா மல் நீங்கள் எப்படி உள்ள போக லாம்? எப்படி வரலாம்?” என்று பேசி யுள்ளார். புல் தைலம் இயந்திரம் பழுதுபார்க்க வந்த முருகானந்தத் தைப் பார்த்து கடுமையாகப் பேசி யுள்ளார்.  கடந்த வாரம்கூட 108 தாய் சேய்  நல ஆப்புலன்ஸ் காட்டுப்பட்டியை சார்ந்த மல்லீஸ்வரி, க/பெ. நாகராஜ் என்பவருக்கு எரிசனம்பட்டி மருத் துவமனையில் குழந்தை பிறந்த 3  நாள் குழந்தையை அப்பர் ஆழியார்  வந்து ஆம்புலன்ஸில் இறக்கிவிட்டுச்  சென்றுவிட்டனர். கைக்குழந்தையு டன் மல்லீஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல், மலைவாழ் மக் கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு  கொண்டு அவர்கள் மூலம் அப்பர் ஆழியாருக்கு வாகனத்தை அனுப்பி  தங்கள் குடியிருப்புக்குச் சென்றார். அப்பர் ஆழியாரிலிருந்து குருமலை  வரை 108 ஆம்புலன்ஸ் வருவ தில்லை இங்கு உடல்நிலை சரி யில்லாத நேரங்களிலும் ஏதாவது அவசர தேவைகளுக்கு இங்குள்ள மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஜீப்புகளைத்தான் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது இந்த நிலையில் இங்குள்ள வாகனங்கள் பழுதானால் உடுமலையை சேர்ந்த பென்ஸ் ஓர்க்ஷாப் மெக்கானிக் சுதா கர் வந்து சரி செய்து கொடுப்பது வழக் கம் இவர்கள் இப்படி பேசியதில் மனம் உடைந்த மெக்கானிக், இனி மேல் இங்கு வாகனங்கள் பழுதா னால் நாங்கள் வந்து பார்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார். எனவே மலைவாழ் மக்கள் வாழ் வாதாரம் பாதிப்படையும் வகையி லும், மலைவாழ் மக்கள் மருத்துவ  தேவைக்கு வாகனத்தை பயன்ப டுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி, இம்மக்களை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசிய  வனக்காவலர் காளிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க, மலைமக்கள் சார் பிலும் சங்கத்தின் சார்பிலும் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளனர்.