நாமக்கல், ஆக.13- நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, குமாரபாளையத் தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் கள், கடற்பாசி நிறமிகளைக் கொண்டு ஓவியம் வரைந்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் உள்ள தனியார் பள்ளியில் 78 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா வினை முன்னிட்டு, செவ்வாயன்று உலக சாதனை நிகழ்வாக 148 மாணவ, மாணவிகள் இந்திய தேசிய கொடியை கடற்பாசி நிறமிகளை கொண்டு வரைந் தனர். ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட் அமைப் பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், ஒவ்வொரு மாணவருக்கும் இரண் டுக்கு நான்கு என்ற அளவிலான கார்ட் போர்ட் சாட் வழங்கப்பட்டு, அதில் பஞ்சு மற்றும் கடற்பாசிகளால் ஆன நிறமி களை கொண்டு வண்ணங்களை ஒத்தி எடுத்து 78 நிமிடங்களில் தேசிய கொடியை வரையும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் உலக சாதனைக்கான சான்றிதழும், பதக் கமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறைந்த நேரத்தில் தேசியக் கொடியை வரைந்த மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்க ளும் வழங்கப்பட்டன.