districts

img

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு: சைக்கிள் பேரணி

சேலம், பிப்.19- “ஸ்டார்ட் அப் தமிழ்நாடு” குறித்த விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கி யது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக் கும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு, தமிழ் நாட்டில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்திய அளவில் முதல் இடத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா தமிழ்நாடு இருந்து வருகி றது. தொழில் முனைவோரை ஊக்குவிக் கும் வகையில் புதிய தொழில் துவங்க ஏற்ப டுத்தப்பட்ட இந்த அமைப்பை பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற் றது. இதனை விநாயகா மிசன் மருத்துவ மனை முதல்வர் செந்தில் குமார் மற்றும் மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவக் குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், மூன்றோடு வழி யாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.