சேலம்,மே 30- மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த ஆசிரிய ருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சேலம் மாநகர் 3ரோடு அருகே ஸ்ரீ வித்யாமந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கணக்கு ஆசி ரியரான சதீஷ்குமார் என்பவர் மாணவி களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு பயி லும் மாணவி ஒருவர் தனது பெற்றோரி டம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிரியரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள் ளனர். அதன்பின்பு சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சதீஷ் சிறையில் அடைக்கப் பட்டார். கடந்த மூன்று ஆண்டுக ளாக சேலம் போக்சோ சிறப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரனையின் திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்ற வாளி சதீஷ்க்கு 5ஆண்டு சிறை தண்ட னையும், 20ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.