districts

img

தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கும் தையல் தொழிலாளர்கள்!

தீபாவளி என்றாலே நம்  நினைவுக்கு வருவது வண்ணமய மான உடைகள், விதவிதமாய் வெடிக்கப்படும் பட்டாசு வகை கள் மற்றும் இனிப்பு வகைகள் என ஒரு புதுவித புத்துணர்வு நம்  மனதை குதூகலிக்கும். மேற் கூறிய மூன்று விதமான விஷயங் களில் முதன்மை பாத்திரமாக இருப்பது ஜவுளி வகைகள். வரு டத்தில் எத்தனையோ முறைகள் புத்தம், புதிய ஜவுளிகள் எடுத் தாலும், தீபாவளி பண்டிகை யொட்டி எடுப்பது தனித்துவமாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு நாடு முழு வதும் தீபாவளி பண்டிகை விசேஷ மான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பிறந்ததற்கு பல்வேறு காரணிகள் கூறப்பட் டாலும், அதை எல்லாவற்றையும் தாண்டி தீபாவளி பண்டிகை என்பது கூடிக் கொண்டாடும் விழா வாக இருக்கிறது.  அப்படிப்பட்ட தீபாவளி பண்டி கையை தையல் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள் ளனர். இதுகுறித்து குமாரபாளை யம், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தையல் கடை நடத்தி  வரும் கார்த்தி என்பவர் கூறுகை யில், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான தையல் தொழிலாளர்கள் உள்ளனர். தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு  வித புது உற்சாகம் எங்களைத் தொற்றிக் கொள்ளும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தீபாவளி பண்டிகையை கொண் டாடக்கூட நேரமில்லாமல் தீபா வளி தினத்தன்று கூட புதுவித ஆடைகளை தைக்கும் அளவிற்கு அவ்வளவு நேர நெருக்கடியில் இருந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ரெடிமேட் ஆடைகள் மீது பொதுமக்களின் கவனம் திரும்பியதால், எங்கள்  வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளது. இருந்தபோ திலும் எங்களுக்கான நிரந்தரமான  வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால், ஓரளவுக்கு பொருளாதாரத்தை  சமாளித்து வருகிறோம். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலம் முழுமையாக இருந் தாலும் இப்போது முதலே எங்க ளுக்கான ஆர்டர்களை நாங்கள்  வாங்கி வருகிறோம். தோராய மாக ஒரு முழுக்கை சட்டை தைப் பதற்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய்  வரை வாங்குகிறோம். கால் சட்டை தைப்பதற்கு 300 ரூபாய்  முதல் 400 ரூபாய் வரை வாங்கு கிறோம். ரெடிமேட் ஆடைகள்  இதை காட்டிலும் குறைந்த விலை யில் வாங்கிக் கொள்ளலாம் என்ப தால், பெரும்பாலான வாடிக் கையாளர்கள் எங்களிடம் துணி  தைக்க ஆர்டர் கொடுக்க தயங்கு கின்றனர். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதி விசைத் தறி தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் நிறைந்த பகுதி என்பதால், சில எதார்த்தமான விஷயங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மற்ற  தொழில்களைப் போல எங்கள்  தொழில் வருடம் முழுவதும் இருக் காது. தீபாவளி பண்டிகையை ஒட்டிய வியாபாரம் மட்டுமே எங் களை ஓரளவுக்கு பாதுகாத்து வரு கிறது. கார்மென்ட்ஸ் போன்ற தொழில் கூடங்கள் அதிகரித்து இருந்தாலும், வேறு வழியின்றி  முடிந்தவரை இந்த தொழிலை சார்ந்து பணியாற்ற முயற்சிக் கிறோம். எனவே, ஒன்றிய, மாநில  அரசுகள் தொலைநோக்கு பார் வையுடன் சிறு, குறு தொழில்களை  பாதுகாப்பதற்கு போதிய முயற்சி களை எடுத்தால் மட்டுமே எங்க ளைப் காப்பாற்ற முடியும், என் றார். –பிரபாகரன்.