districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போதை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

சேலம், செப்.16- வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட  போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து  வந்த நபரை காவல் துறையினர் கைது செய்து, அவரிட மிருந்து ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம்,  வாழப்பாடி அருகே பழனியாபுரம் புதுகாலனி பகுதியில் சட்டவிரோதமாக குடோனில் குட்கா உள்ளிட்ட போதை  பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வாழப்பாடி தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல்  துறையினர் அந்த குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி  வைத்து நேரடியாக சிறு, குறு, கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவபாலன் என்பவரை கைது செய்த காவல் துறையினர், குடோனிலிருந்த சுமார்  ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள்  மற்றும் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

இலங்கை அகதிகள் முகாமில் உடலில் தீ பிடித்து மூதாட்டி பலி

கோவை, செப். 16 -  கோவை பூலுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள்  முகாமில் உடலில் தீ பிடித்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூலுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள்  முகாமை சேர்ந்தவர் டேனியல் இவரது மனைவி ஞானமணி  (82). வயது முதுமை காரணமாக 4 ஆண்டுகளாக வீட்டில் தனி யாக இருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே மகன் சேவியர்  வசித்து கொண்டு ஞானமணியையும் பராமரித்து வந்தார்.  இந்நிலையில் வியாழன்று இரவு வழக்கம் போல உணவு  உட்கொண்டு தூங்கச்சென்றனர். இந்நிலையில் வெள்ளி யன்று காலை ஞானமணியின் வீட்டிற்கு சென்ற பார்த்த போது  அவர் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை யடுத்து சேவியர் ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.  வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கம் போல பைபில் படிக்க மெழுகு வர்த்தியை அருகில் ஏற்றி வைத்திருந்ததால், அந்த தீ உடையில் பிடித்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்கட்டண உயர்வு -  அதிமுக ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 16 -  தமிழக அரசின் மின் கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்வை  கண்டித்து  அதிமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர்  அலுவலகம் முன்பாக  அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வ ராஜ், ஜெயராமன், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

கோவை – மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

உதகை, செப்.16- கோவை - மஞ்சூர் சாலையில் காட்டு  யானைகள் மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்  கவனமாக செல்லுமாறு வனத்துறை யினர் அறிவுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூரி லிருந்து கெத்தை வழியாக கோவை  மாவட்டம், காரமடை மற்றும் பெரிய நாயக்கன்பாளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் உள்ளதால் வன  விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில். கடந்த சில நாட்களாக மாலை 6 மணியளவில் கோவையில் இருந்து மஞ்சூருக்கு செல்லும் கடைசி  பேருந்தை அவ்வப்போது காட்டு யானைகள் வழி மறிக்கின்றன. சமீபத்தில் கெத்தை பகுதியில் குட்டி யுடன் காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. மேலும், சாலையோரம் உள்ள  மரக்கிளைகள் மற்றும் நெடுஞ் சாலைத்துறை அறிவிப்பு பலகைகள், சாலையோர மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத் தினர். மேலும் சிலர் வீடியோ மற்றும்  புகைப்படம் எடுத்து சமூக வலைதளங் களில் வைரலாக பரப்பினர். காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை எடுத்துச் சென்றனர். இதேபோல் தற்போது கெத்தை பகுதி சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு நட மாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப்பகுதியில் வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட விலங்குகள் சாலைகளில் உலா வருவ தால் வாகன ஓட்டிகள் மிகவும் கவன மாக செல்ல வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. அதே போல் அதிகமாக சத்தம் எழுப்பி யானை களை அச்சுறுத்தக்கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க  முயற்சி செய்யக்கூடாது, என்றனர்.

யானை மிதித்து லாரி ஒட்டுநர் பலி

ஈரோடு, செப்.16- பண்ணாரி அம்மன் கோவில் அருகே யானை மிதித்து லாரி ஒட்டுநர் பரிதாபமாக இறந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள்  வசித்து வருகின்றன. இந்த யானைகள்  இரவு நேரத்தில் பண்ணாரி அம்மன்கோவில்  வளாகம் மற்றும் சோதனை சாவடிகள் அருகே நடமாடுவது வழக்கம். இந்நிலை யில் புதனன்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை ரோட்டில் சுற்றித்திரிந்தது. பின்னர் அந்த யானை பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த  லாரி ஒட்டுநர்கள் பார்த்தனர். உடனே யானையை அங்கிருந்து விரட்ட கூச்சல்  போட்டார்கள். ஆனால் யானை அங்கிருந்து  செல்லவில்லை. கோவில் வளாகத்திலேயே அங்குமிங்கும் சுற்றித்திரிந்தது. தொடர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடு பட்டனர். இதில் ஆவேசம் அடைந்த யானை  திரும்பி அவர்களை துரத்த தொடங்கியது. இதனால் அனைவரும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடினார்கள்.

அப்போது ஒருவர் கல் தடுக்கியதில் கீழே விழுந்தார். இதனால் அவர் யானையிடம் சிக்கிக்கொண்டார். பின்னர் யானை துதிக்கையால் அவரை தூக்கி போட்டு காலால் மிதித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் அவர் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு யானையை அங்கிருந்து காட்டுக்குள் விரட்டி விட்டனர். பின்னர் இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவரின் பையில் இருந்த ஓட்டு்னர் உரிமத்தை போலீசார் எடுத்து பார்த்தனர். அவர் கர்நாடக மாநிலம்  மாண்டியா மாவட்டம் மலப்பள்ளி என்ற ஊரை சேர்ந்த சீனிவாஸ் (33) என்றும், லாரி  ஒட்டுநர் என்பதும் தெரிய வந்தது.  மேலும் போலீசார் நடத்திய விசார ணையில், சீனிவாஸ் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பண்ணாரி அம்மன் கோவில் வழியாக இரவு நேரத்தில் லாரியில் சென்றுள்ளார். ஆனால் லாரிகள் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் லாரியை கோவில் அருகே நிறுத்திவிட்டு காலையில் செல்லலாம் என இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த யானையை விரட்ட முயன்றபோது யானையிடம் சிக்கி  இறந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்வ மனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும்  இதுகுறித்து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு குவியும் வாழ்த்து

ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு குவியும் வாழ்த்து மேட்டுப்பாளையம், செப்.16- இந்திய ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறு முகையைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள ரேயான் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். டெய்லரான இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், வசுந்தரா (20) என்ற மகளும் உள்ளனர். இதில், வசுந்தா கோவை சிஎம்எஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இதனிடையே வசுந்தரா கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில்  மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.  தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பணிக்கு விண்ணப்பித்தார். இதில், மும்பை ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர் வில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து அவர் இந்திய ராணுவத்தில் லோயர் டிவிஷனல் கிளார்க் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்திய ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி வசுந்தராவிற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில் சிறுமுகை காவல் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகா, சிறுமுகை  ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சிறுமுகை பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரி கள் சங்க நிர்வாகிகள் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரி வித்தனர்.

யானை தந்தங்கள் பறிமுதல் - 7 பேர் கைது

ஈரோடு, செப்.16- அந்தியூர், பர்கூர் வனப்பகுதிகளின் அருகாமையில் உள்ள கிராமங்களில் யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் வனப்பகுதிகளில் அருகாமையில் உள்ள கிராமங்களில் யானைத் தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் மலைப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையம் ராமசாமி தோட்டத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது தென்னை மட்டைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த யானை தந்தங்களை கண்டு பிடித்தனர். யானை தந்தங்களை கடத்தி விற்பதற்காக பதுக்கி யது  தெரிய வந்தது. இதையடுத்து சந்திபாளையம் நடுவூர் பகு தியை சேர்ந்த ராமசாமி (40), புதுக்காடு பகுதியைச் சேர்ந்த  வரதராஜன் (47), பழைய பாளையம் பிரபுகுமார் (37), வாணி புத்தூர் கெம்பனூர் ஊராளி குமாரசாமி (50), கிருஷ்ணகிரி காமராஜ் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (33), திருப்பூர் கணபதிபாளையம் முருகப்பசெட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவான பர்கூர் மலைப்பகுதி பெஜில்பாளை யத்தைச் சேர்ந்த சித்தேஷ், முருகன் ஆகியோரை போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிடிப்பட்ட யானை தந்தங்கள் மற்றும் குற்றவாளிகளை அந்தியூர் வனச் சரகரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  இதேபோல் பர்கூர் மலைப்பகுதி பெரியூர் என்ற இடத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு தந்தம் கண்டுபிடிக்கப்பட் டது. இதனைப் பதுக்கி வைத்திருந்த பெரியூர் நாகன் (35)  கைது செய்யப்பட்டார். மற்றொருவரான பெரியூர் மாதேவன்  (37) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தங்கப் புதையல் என ஏமாற்றி மளிகை கடைகாரரிடம் பணம் சுருட்டல்

கோவை, செப்.16 - புதையல் தங்கம் என நம்ப வைத்து மளிகை கடைக்காரரிடம் 10 லட்சம் ரூபாயை சுருட்டிய நபர்கள் மற்றொரு கடைக்காரரிடம் தங்கப் புதையலுக்கு பேரம் பேசும் ஆடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த வாக ரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதா சிவம். இவரது மளிகை கடைக்கு வாடிக்கை யாளர்கள் போல வந்து அறிமுகமான 2  நபர்கள், சதாசிவத்திடம் தாங்கள் கட்டிட  வேலை செய்து வருவதாகவும், குழி தோண்டும்போது சுமார் ஒரு கிலோ தங்க நகை புதையல் கிடைத்துள்ளதாகவும் கூறியி ருக்கின்றனர். இதுகுறித்து யாரிடமும் தகவல் சொல்ல வேண்டாம் என்றும், தங்கப் புதை யலை பாதி விலைக்கு தருவதாகவும் சதாசி வத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  நம் பிக்கையை ஏற்படுத்த இரண்டு குண்டுமணி தங்கத்தை கொடுத்து சோதித்து பார்க்குமாறு கூறியுள்ளனர். அதனை சோதித்துப் பார்த்த சதாசிவம், தங்கப் புதையலை உண்மை என  நம்பி, 10 லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக்  கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் துணிப்பையில் நகை இருப்பதாக கூறி கொடுத்துவிட்டு 10 லட்சம் ரூபாயை சதா சிவத்திடமிருந்து பெற்றுக் கொண்டு அங்கி ருந்து சென்றனர். துணிப் பையை பிரித்துப் பார்த்தபோது அதிலிருந்தது போலின் நகை கள் என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதாசிவம் இது குறித்து கரு மத்தம்பட்டி காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
 

;