districts

img

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள் தர்ணா

கோவை, அக்.4- பொதுத்துறை பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களை தனியார்மய மாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் இணைந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். “பொதுத்துறை பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களை தனியார் மைய மாக்கும் முயற்சியை கைவிட வேண் டும். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண் டும். 1995 ஆம் ஆண்டு ஓய்வூதிய திட்டத் தில் அனைத்து ஊழியர்களையும் இணைக்க வேண்டும், குடும்ப ஓய்வூ தியத்தை 30 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும். ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண் டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்” உள்ளிட்ட ஏழு  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை இன்சூ ரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள் முன் னெடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை  நஞ்சப்பா சாலையில் உள்ள யுனை டெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் ஊழியர் கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரி கள் உள்ளடக்கிய 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டக்குழுவின் ஒருங்கிணைப் பாளர் எஸ்.வி.சங்கர் தலைமை வகித் தார். போராட்டத்தை வாழ்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் நிர்வாகி வி.சுரேஷ், வங்கி ஊழி யர் சங்கத்தின் நிர்வாகி எம்.வி.ராஜன் ஆகியோர் உரையாற்றினர். கூட்ட மைப்பின் நிர்வாகிகள், சுரேஷ், இரா. வேணுகோபால், எஸ்.பி.உதய குமார், பிரவின், சிவகணேஷ் ஆகி யோர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். இதில், திர ளானோர் பங்கேற்றனர்.