districts

img

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி, செப்.17- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடி யாக குறைந்துள்ள நிலையில் பரிசல் இயக்க சனிகிழமை முதல் அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.  கர்நாடக மாநில அணை களில் இருந்து நீர் திறப்பு குறைப்பு மற்றும் இரு மாநில எல்லை யில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வெள்ளியன்று 43 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து சனியன்று காலை 28 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அருவிகளில் அதிகமாக தண் ணீர் கொட்டுவதால் குளிக்க தடை நீடிக்கிறது. ஆனால் நீர் வரத்து குறைந்துள்ளதால் சனிக்கிழமை முதல் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணைக்கு வெள்ளியன்று காலை 40 ஆயிரம்  கனஅடியாக இருந்த நீர்வரத்து சனிக்கிழமை காலை  30 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளதுத. இதனால் அணையில்  இருந்து நீர்திறப்பும் 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப் பட்டுள்ளது. சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக விநாடிக்கு23,000 கனஅடி உபரி நீர்  போக்கி வழியாக விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப் பட்டுள்ளது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத் திற்கு விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப் படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. சனிக்கிழமை 64வது நாளாக,  நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. கடந்த ஜுன் மாதம் முதல் 16ஆம் தேதி வரை, மேட்டூர் அணைக்கு 446 டிஎம்சி  தண்ணீர் வந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 437 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

;