வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

மாநகராட்சி, ரயில்வே நிர்வாகத்தால் பரிதவிக்கும் மக்கள் ஆவராம்பாளையத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆய்வு

கோவை,ஜன.21– ரயில்வே துறை மற்றும் கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் மழைக்காலங்களில் கோவை ஆவா ரம்பாளையம் ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பரிதவித்து வரு கின்றனர் என அப்பகுதியில் ஆய்வு செய்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரி வித்தார். கோவை மாவட்டம், ஆவாரம் பாளையம் பகுதியில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு ரயில்வே இருப்புப் பாதை அருகே உள்ள சங்கனூர் கால்வாய் பராமரிப்பு இன்றி உள் ளது. இதனால் மழைக்காலங்களில் வருகிற தண்ணீர் இந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால் பொதுமக் கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இங்கு வடிகால் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு அமைப்பினர் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.

ஆனால், இது ரயில்வே துறைக்கு சொந்தமான இடம் என மாநகராட்சி யும், எங்களுக்கு சம்பந்தமில்லை என ரயில்வே நிர்வாகமும் மாறி மாறி அலைகழித்து வருகின்றன.   இந்நிலையில், அண்மையில் பெய்த மழையில் நான்கு வீடுக ளுக்கு மேல் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார்.  மேலும், கோவை மாநகராட்சி வடக்கு மண் டல இளநிலை உதவியாளர் ஜோதி விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், ரயில்வே துறை தொழில்நுட்ப பிரிவு (இன்ஜினியர்) முகமது சிராஜூதின் ஆகியோர்களை வரவழைத்து பல் வேறு விபரங்களை கேட்டறிந்தார்.  

குறிப்பாக சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் இது ரயில்வே துறைக்கு சொந்தமான இடமா அல்லது கோவை மாநகராட்சிக்கு சொந்த மானதா என கேட்டறிந்ததுடன், இந்த இடத்தில் வடிகால் அமைத் திட இருப்பதற்கான தடை குறித் தும் கேட்டறிந்தார். அப்போது, இரு துறையின் அதிகாரிகளும் ஓரிரு நாட்களில் இந்த இடம் எந்த துறைக்கு சொந்மானது என்பதை வரைபடத்தை கொண்டு ஆராய்ந்து தீர்வை எட்டுவதாக உறுதியளித்த னர். மேலும், இது மாநகராட்சிக்கு சொந்தமானது என்றால் உடனடி யாக வடிகால் அமைத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பி. ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தி னார். அதிகாரிகளும் விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.

இந்த ஆய்வின்போது ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் பீளமேடு நகரக்குழு உறுப்பினர் அய்யாசாமி, ஜோதி பாசு மற்றும் பொதுமக்கள், அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

;