districts

img

ஊதிய முரண்பாட்டை களைந்திடுக ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 6- பட்டுவளர்ச்சித்துறை யில் ஓய்வூதியர்களில் உள்ள ஊதிய முரண் பாட்டை களைந்திட வலியு றுத்தி சேலம் பட்டுவளர்ச் சித்துறை இயக்குநர் அலுவ லகம் முன்பு புதனன்று தமிழ் நாடு அரசு பட்டுவளர்ச்சித் துறை அனைத்து நிலை  ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாநில தலைவர் பி.கோவிந்த ராஜுலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மொழியில் தேர்வில்  விலக்கு அளிக்கப்பட்ட ஊழியர்களின் ஊதிய  முரண்பாடுகள் களைந்திட வேண்டும். நிலுவைத் தொகை மற்றும் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர், இளைவர் ஊதிய  முரண்பாட்டை சமன் செய்து ஊதிய நிலுவைத் தொகை மற்றும் திருத்திய ஓய்வூ தியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில்,  ஓய்வு பெற்ற உதவி இயக்குநர்கள் ஏ.மாரி முத்து, ஏ.லட்சுமணன், எம்.தங்கராஜ் மற்றும்  ஆர்.மோகன்ராம், மாநில பொதுச் செய லாளர் கே.அகோரம், மாநில பொருளாளர் ஏ.செபாஸ்டியன் உள்ளிட்ட ஓய்வு பெற்ற அனைத்து நிலை பட்டுவளர்ச்சித் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.