வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஜன. 21-  காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிடக் கோரி, பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர்  வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.தங்கமணி, பொள்ளாச்சி வட்டக் கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் வி.சசிதரன், குறிச்சி கிளை உதவி செயலாளர் வி.மலைச்சாமி, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் ஓ.ராமசந்திரன், ஜி.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;