கோவை, பிப்.13- கோவை மாவட்டத் தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன்குமார் க.கிரியப்பன வர், தொடர்ந்து தமிழ் நாடு அரசின் திட்டங்கள், சேவைகளை முழுமை யாக மக்களிடம் கொண்டு சேர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு திறன்மேம்பாடு கழகம் மேலான்மை இயக்கு நராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை இணைச் செயலாள ராக பணியாற்றி வந்த பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.பி.எஸ் கோவை மாவட்ட ஆட்சியராக வியாழனன்று பொறுப்பேற் றுக் கொண்டார். அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது பேசிய அவர், இந்த சிறந்த மாவட்டத்தின் முக் கிய பொறுப்பில் இணைந்துள்ளேன். கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சிறப்பு திட்டங்கள் அனைத்து துறையுடனும் இணைந்து கொண்டு வர எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு தனி கவனம் செலுத்தி துறை அலுவலர்களுடன் இணைந்து தீர்வு காண முயற்சி கள் எடுக்கப்படும். மாவட்டத்திற்கு தேவையான சேவை களை மேற்கொள்ள உள்ளோம் அனைவரின் முழு ஒத் துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு காவல் துறையுடன் இணைந்து கடுமையாக்கியுள்ளது. அதை மேலும் வலுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.